வாஷிங்டன்,நவ.8:மும்பை தாக்குதலின் சூத்திரதாரியாக கருதப்படும் டேவிட் ஹெட்லியின் மனைவிகள் மூலமாக அவருடைய ரகசிய சதித்திட்டம் குறித்த தகவல்கள் கிடைத்த பிறகும் நடவடிக்கை மேற்கொள்வதில் அமெரிக்க உளவுத்துறை தோல்வியை தழுவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவுக்கெதிரான சிறப்பு நடவடிக்கைக்கு பாகிஸ்தானைச் சார்ந்த போராளிகளுடன் ஹெட்லிக்கு பயிற்சி அளிக்கப்பட்டதுத் தொடர்பாக 2001 ஆம் ஆண்டிற்கு பிறகு ஹெட்லியின் இரு மனைவிகளிடமிருந்தும் அமெரிக்க உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்திருந்தன.
டைரக்டர் ஆஃப் நேசனல் இண்டலிஜன்ஸிற்காக தயாராக்கிய அறிக்கையில்தான் இத்தகவல் அடங்கியுள்ளது.
"ஹெட்லியின் மனைவிகளைத் தவிர அவருடைய ரகசிய சதித்திட்டங்களைக் குறித்து வேறு வழிகள் மூலமாகவும் தகவல்கள் கிடைத்திருந்தன. ஆனால், மும்பை தாக்குதல் நடக்கும் வரையிலான ஏழு வருடங்களுக்கிடையில் ஒருமுறைக் கூட ஹெட்லியை விசாரிக்கவோ அவரை கறுப்புப் பட்டியலில் இடம்பெறச் செய்யவோ நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
68 பேரின் மரணத்திற்கு காரணமான சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பில் ஹெட்லிக்கு பங்குள்ளது குறித்து அவருடைய முன்னாள் மனைவி மும்பை தாக்குதல் நடப்பதற்கு சில மாதங்கள் முன்பு தெரிவித்திருந்தார்.
தனது முன்னாள் கணவர் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளவிருக்கிறார் என அவர் அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
2001, 2002, 2008 ஏப்ரல், டிசம்பர் மாதங்களில் ஹெட்லியின் தாக்குதல் திட்டம் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன. கடைசி தகவல் கிடைத்த வேளையில் மும்பை தாக்குதல் நடந்து முடிந்திருந்தது." இவ்வாறு அத்தகவல் கூறுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "முன்னரே தகவல் கிடைத்த பிறகும் ஹெட்லிக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுக்கவில்லை"
கருத்துரையிடுக