லண்டன்,நவ.8:ஈராக்கில் சர்ச் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து கிறிஸ்தவர்கள் ஈராக்கிலிருந்து வெளியேற வேண்டும் என லண்டன் சிரியன் ஆர்த்தோடக்ஸ் சர்ச்சின் ஆர்ச் பிஷப் அதனாஸியோஸ் தாவூத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஈராக்கில் கிறிஸ்தவர்களுக்கு போதிய பாதுகாப்புத் தராத அரசை அவர் விமர்சித்தார்.
பாக்தாதில் கத்தோலிக்க சர்ச் ஒன்றில் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கையில் 52 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
ஈராக் மற்றும் எகிப்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ள அல்காயிதா போராளிகள் என்றழைக்கப்படுவோரை விடுவிப்பதற்காகத்தான் சிலர் சர்ச்சில் நுழைந்து அங்கிருந்தவர்களை பிணைக் கைதிகளாக பிடித்தனர்.
அல்காயிதா மேலும் தாக்குதல் நடத்த வாய்ப்புகளிருப்பதால் கிறிஸ்தவர்கள் அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டுமெனவும், அவர்களுக்கு பிரிட்டன் அடைக்கலம் வழங்கவேண்டும் எனவும் ஆர்ச் பிஷப் வலியுறுத்தியுள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "கிறிஸ்தவர்கள் ஈராக்கை விட்டு வெளியேற வேண்டும - லண்டன் ஆர்ச் பிஷப்"
கருத்துரையிடுக