புதுடெல்லி,நவ.4:டெல்லியில் கஷ்மீருக்கு சுதந்திரம் கோரிய கருத்தரங்கில் உரை நிகழ்த்திய கஷ்மீர் தெஹ்ரீக்-இ-ஹூர்ரியத்தின் தலைவர் செய்யத் அலிஷா கிலானி மற்றும் பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் ஆகியோர் மீது தேசத்துரோகம் வழக்கைப் பதிவுச் செய்வதற்கான் புகார் குறித்த 16 பக்க அறிக்கையை சமர்ப்பிக்க டெல்லி போலீசாருக்கு மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்ட்ரேட் நவிதா குமாரி பாகா உத்தரவிட்டுள்ளார்.
கிலானிக்கும், அருந்ததிராய்க்குமெதிராக பண்டிட்டுகள் அளித்துள்ள மனு தொடர்பாகத்தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசின் இறையாண்மைக்கு சவால் விடும்விதமாக தேசத் துரோகமான உரைகள் கருத்தரங்கில் நிகழ்த்தப்பட்டதாக வழக்குதாரரான சுசில் பண்டிட்டின் வழக்கறிஞர் விகாஸ் படோரா அறிவித்துள்ளார்.
இவர்களுக்கெதிராக வழக்கு பதிவுச்செய்ய உத்தரவிடவேண்டும் எனவும் படோரா கோரியுள்ளார். தேசத்துரோக உரை நிகழ்த்தியவர்களுக்கெதிராக வழக்குப்பதிவுச் செய்ய உத்தரவிடவேண்டும் எனக்கோரித்தான் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசு இதற்கெதிராக வழக்கு பதிவுச்செய்வதில் தோல்வியடைந்து விட்டதாகவும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிலானி, அருந்ததிராய், எஸ்.ஏ.ஆர்.கிலானி, ஜம்முகஷ்மீர் பல்கலைக்கழக பேராசிரியர் ஷவ்கத் ஹுசைன் உள்பட ஐந்துபேர் மீது வழக்குப் பதிவுச்செய்ய அம்மனுவில் கோரப்பட்டுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "கஷ்மீர் சுதந்திரம் குறித்த கருத்தரங்கு: அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு"
கருத்துரையிடுக