அயோத்தியா,நவ.4:பாப்ரி மஸ்ஜித் வழக்கை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண்பதற்காக இவ்வழக்கில் முக்கிய மனுதாரர்களில் ஒருவரான ஹாஷிம் அன்சாரி பிரபல முஸ்லிம் சமுதாயத் தலைவர் அஃப்ஸல் அஹ்மது கானுடன் சந்திப்பு நடத்தினார்.
ஃபைஸாபாத்தில் வைத்து நடந்த சந்திப்பில் பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண்பதுத் தொடர்பாக இருவரும் கலந்துரையாடினர். அஃப்ஸல் கானின் வீட்டில் வைத்துத்தான் இச்சந்திப்பு நடந்தது.
அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்சின் தீர்ப்பு வெளியான பிறகு முதன்முறையாக அன்ஸாரி அயோத்திக்கு வெளியே சமரச முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடுச் செய்ய ஏகமனதாக முடிவுச்செய்துள்ள முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் தீர்மானம் பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகளை பாதிக்காது என அஃப்ஸல் அஹ்மத் கான் தெரிவித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "பாப்ரி மஸ்ஜித்:ஹாஷிம் அன்ஸாரி அஃப்ஸல் அஹ்மது கானுடன் சந்திப்பு"
கருத்துரையிடுக