4 நவ., 2010

ஒபாமாவின் தாஜ் ஹோட்டல் விருந்தில் கர்காரேக் குடும்பத்தினருக்கு அழைப்பு இல்லை

மும்பை,நவ.4:இந்தியாவிற்கு வருகைத் தரவிருக்கும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மும்பையில் நடந்த தாக்குதலுக்குள்ளான தாஜ்மஹல் பாலஸ் ஹோட்டலில் சனிக்கிழமை அளிக்கவிருக்கும் விருந்து நிகழ்ச்சியில் மும்பைத் தாக்குதலில் மர்ம நபர்களால் கொலைச் செய்யப்பட்ட மாவீரன் ஹேமந்த் கர்காரேயின் குடும்பத்தினருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

மும்பைத் தாக்குதலுக்குள்ளான லியோஃபோர்ட் கஃபேயின் உரிமையாளர்கள் உள்ளிட்டவர்களை அமெரிக்க தூதரக அதிகாரிகள் நேரடியாகச் சென்று அழைப்பிதழைக் கொடுத்து விருந்திற்கு அழைப்புவிடுத்தனர்.

கஃபேயின் உரிமையாளர்களான ஃபர்ஹான் ஜஹானி மற்றும் அவருடைய சகோதரர் ஃபர்ஸாத் ஆகியோரை விருந்து நிகழ்ச்சிக்கு அழைத்த செய்தி வெளியானதுடன் தாக்குதலுக்கு பலியானவர்களின் குடும்பத்தினர் புறக்கணிக்கப்பட்டது தெரியவந்தது.

வருகிற நவம்பர் 6-ஆம் தேதி காலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா நடத்தும் விருந்து நிகழ்ச்சிக்கு அழைப்புவிடுத்த அமெரிக்க தூதரக அதிகாரிகள், விருந்து நிகழ்ச்சியின் நேரம், இடம் குறித்த தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்ததாக ஃபர்ஹான் தெரிவித்துள்ளார்.

பீர் குடிப்பதற்கு தங்களது கஃபேக்கு ஒபாமா வருவார் என்பது லியொஃபோர்ட் கஃபேயின் உரிமையாளர்களின் எதிர்பார்ப்பாகும். ஆனால், தங்களை ஒபாமா நடத்தும் விருந்து நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை என மும்பைத் தாக்குதலில் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரிகளின் மனைவிகள் தெரிவித்துள்ளனர்.

தங்களை விருந்து நிகழ்ச்சிக்கு அழைக்கமாட்டார்கள் எனக் கருதுவதாகவும், கடைசி நேரத்தில் அழைப்பது மரியாதையாகாது எனவும் கர்காரேயின் மனைவி கவிதா கர்காரே குறிப்பிட்டார்.

ஒபாமாவின் வருகை நெருங்கிவிட்டதால் தங்களுக்கு அழைப்புவிடுக்கப்படும் எனக் கருதவில்லை என விஜய் சாலஸ்கரின் மனைவி ஸ்மிதாவும், அசோக் காம்தேவின் மனைவி வினீதா காம்தேவும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஒபாமாவின் தாஜ் ஹோட்டல் விருந்தில் கர்காரேக் குடும்பத்தினருக்கு அழைப்பு இல்லை"

கருத்துரையிடுக