4 நவ., 2010

கர்நாடகாவில் குதிரை வியாபாரம்: லோகாயுக்தா விசாரணை துவங்கியது

பெங்களூர்,நவ.4:கர்நாடகாவில் ஆளும் பா.ஜ.க கட்சி எதிர்கட்சி எம்.எல்.ஏக்களை ஆசை வார்த்தைகளைக் காட்டி குதிரை வியாபாரம் நடத்தியதாக கூறும் புகாரைக் குறித்து கர்நாடகா மாநிலத்தின் ஊழல் மற்றும் லஞ்சப்புகாரை விசாரிக்கும் லோகாயுக்தா முதன்மை விசாரணையை மேற்கொண்டுள்ளதுசில பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் கட்சித் தாவலுக்காக எதிர்கட்சி எம்.எல்.ஏக்களுக்கு லஞ்சம் தருவதாக வாக்குறுதியளித்தனர் என ரமேஷ் கவுடா (மதசார்பற்ற ஜனதாதளம்) என்பவர்தான் லோகாயுக்தாவுக்கு புகார் அளித்திருந்தார்.

புகாரின் அடிப்படையில் முதன்மை விசாரணை நடத்தப்படும் என லோகாயுக்தாவின் சந்தோஷ் ஹெக்டே தெரிவித்துள்ளார்.

புகாருடன் ரமேஷ் கவுடா ஒரு சி.டியையும் வழங்கியுள்ளார். prima facie முதன்மைக் காட்சி வழக்கென்று கருதினால் முழுமையான விசாரணை நடத்தப்படும் எனவும் ஹெக்டே தெரிவித்துள்ளார்.

ரமேஷ் கவுடா அளித்துள்ள சி.டியில் கர்நாடகாவில் அரசியல் நெருக்கடி நீடிக்கும் வேளையில் மதசார்பற்ற ஜனதாதளத்தின் குபி எம்.எல்.ஏ ஸ்ரீனிவாசனும், பா.ஜ.க எம்.எல்.ஏ சுரேஷ் கவுடாவும் நடத்திய உரையாடல்கள் அடங்கியுள்ளன.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கர்நாடகாவில் குதிரை வியாபாரம்: லோகாயுக்தா விசாரணை துவங்கியது"

கருத்துரையிடுக