ஜெய்பூர்,நவ.4:அஜ்மீர் தர்காவில் நடந்த குண்டுவெடிப்புத் தொடர்பாக மேலும் ஒருவரை ராஜஸ்தான் மாநில ஏ.டி.எஸ் கைதுச் செய்துள்ளது.
தாதி பாய், முன்னா, ராஜ் என்ற பெயர்களில் அறியப்படும் ஹர்ஷத்பாய் சோலங்கித்தான் கைதுச் செய்யப்பட்ட நபர்.
2002 ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையின் போது தாக்குதலுக்குள்ளான பெஸ்ட் பேக்கரி வழக்கில் தொடர்புடைய இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் தலைமறைவாகவே இருந்து வந்தார்.
கடந்த நவம்பர் 1-ம் தேதி சொந்த மாநிலமான குஜராத்தில் வைத்து இவர் கைதுச் செய்யப்பட்டார்.
அஜ்மீர் வழக்கில் தொடர்புடைய சுட்டுக் கொல்லப்பட்ட சுனில் ஜோஷியுடன் சோலங்கிக்கு தொடர்புண்டு என ஏ.டி.எஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கைதுச் செய்யப்பட்ட சோலங்கியை தீவிரவாத எதிர்ப்புப்படை அஜ்மீரில் முதன்மை ஜூடிஸியல் மாஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் இவரை நவம்பர் ஒன்பதாம் தேதி வரை ரிமாண்ட் செய்து உத்தரவிட்டது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "அஜ்மீர் குண்டுவெடிப்பு:மேலும் ஒருவர் கைது"
கருத்துரையிடுக