7 நவ., 2010

அமெரிக்க ராணுவத்தினரை கொலைச்செய்த ஆஃப்கான் ராணுவ வீரன்

காபூல்,நவ.7:தெற்கு ஆஃப்கானிஸ்தானில் மூன்று அமெரிக்க ராணுவத்தினரை ஆஃப்கான் ராணுவ வீரர் ஒருவர் கொலைச் செய்ததாக நேட்டோ அறிவித்துள்ளது.

ஹெல்மந்த் மாகாணத்தில் சான்கின் நகரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒருங்கிணைந்த படையும், ஆஃப்கான் அரசும் இதுக்குறித்து விசாரணை நடத்துவதாக நேட்டோ தெரிவித்துள்ளது. இத்தாக்குதலை நடத்திய ஆப்கான் ராணுவ வீரருக்கு தங்களிடம் அடைக்கலம் தேடியதாக தாலிபான் செய்தித்தொடர்பாளர் காரி யூசுஃப் தெரிவித்துள்ளார்.

தாலிபான் இவரை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றியுள்ளதாகவும் யூசுஃப் தெரிவித்துள்ளார். 2001 ஆம் ஆண்டு அமெரிக்க தலைமையிலான அந்நிய ஆக்கிரமிப்பு படையினர் ஆஃப்கானில் அத்துமீறி நுழைந்து தாக்குதலை துவக்கியதிலிருந்து கடுமையான உயிரிழப்பை சந்தித்த ஆண்டாக 2010 ஆம் ஆண்டு மாறியுள்ளது.

தினந்தோறும் போராளிகளின் கரங்களில் சிக்கி உயிரை விடும் அந்நிய ஆக்கிரமிப்பு படையினரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை 2100க்கும் அதிகமான அந்நிய ஆக்கிரமிப்பு படையினர் ஆஃப்கானிஸ்தானில் கொல்லப்பட்டுள்ளனர் என அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளையில், கொல்லப்பட்ட அந்நிய ராணுவத்தினரின் எண்ணிக்கை 4500 என ஆஃப்கானில் பக்தார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அமெரிக்க ராணுவத்தினரை கொலைச்செய்த ஆஃப்கான் ராணுவ வீரன்"

கருத்துரையிடுக