7 நவ., 2010

பாலிவுட் திரைப்படங்கள் இளைஞர்களின் உள்ளங்களை அசுத்தப்படுத்துவதாக பாகிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத்,நவ.7:பாகிஸ்தானில் பரவலாக திரையிடப்படும் இந்தியாவின் பாலிவுட் திரைப்படங்கள் இளைஞர்களின் உள்ளங்களை அசுத்தமாக்குவதாக பாகிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்திய திரைப்படங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க அரசு நடவடிக்கை எடுக்க அவர்கள் பாராளுமன்ற கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர். அதேவேளையில், பாலிவுட் திரைப்படங்களுக்கு தடை விதித்தால் பாகிஸ்தானில் திரைப்பட கலாச்சாரம் அழிவுக்குள்ளாகும் என பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.

பாலிவுட் திரைப்படங்கள் ஏற்படுத்திய தாக்கத்தால் பாகிஸ்தானில் சிறுவர்களின் வார்த்தை பிரயோகங்கள் சாதாரண உரையாடலில் கூட தென்படுவதாக பாகிஸ்தானின் முக்கிய எதிர் கட்சியான பி.எம்.எல்.என் உறுப்பினர் தாஹிரா அவுரங்கசீப் சுட்டிக்காட்டினார்.

பாகிஸ்தானில் தயாராகும் திரைப்படங்கள் இந்தியாவில் திரையிடப்படுகிறதா? என அவர் பாகிஸ்தான் கலாச்சாரத்துறை அமைச்சர் பிர் அஃப்தாப் ஹுசைன் ஷா ஜீலானியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஜீலானி, பாகிஸ்தானில் வீழ்ச்சியடைந்துள்ள திரைப்பட அரங்குகளின் செயல்பாட்டை வலுப்படுத்த பாலிவுட் திரைப்படங்களை திரையிடுவது அத்தியாவசியமானது என பதிலளித்தார்.

செய்தி:மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாலிவுட் திரைப்படங்கள் இளைஞர்களின் உள்ளங்களை அசுத்தப்படுத்துவதாக பாகிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டு"

கருத்துரையிடுக