
அமெரிக்க ராணுவத்தின் நடவடிக்கையினால் ஆப்கான் மக்கள் பொறுமையை இழந்துள்ளனர். இதனால் தாலிபான்கள் வலுப்பெறுவர். ராணுவ நடவடிக்கைகளை குறைப்பதற்கான நேரம் நெருங்கிவிட்டது. பூட்டுகளின் சப்தமும், ஆப்கான் மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் அத்துமீறல்களையும் குறைப்பதற்கான நேரம் நெருங்கிவிட்டது. லட்சத்திற்கும் மேற்பட்ட ராணுவத்தினர் ஆப்கானில் தொடர்வது மக்களால் சகித்துக்கொள்ள இயலாது.
அமெரிக்க சிறப்பு படையினரின் இரவு நேர ரெய்டுகள் மக்களின் துயரத்தை அதிகப்படுத்தியுள்ளது. இது தாலிபானை சக்திப்படுத்தும். ஆப்கான் ராணுவம் கூடுதல் பொறுப்பை ஏற்றுக்கொள்ள தயார்.
எங்களின் வீடுகளில் அமெரிக்க ராணுவத்தினரும், சாலைகளில் அவர்களின் கவச வாகனங்களும் இருப்பதால் ஆப்கான் மக்கள் பொறுமையை இழந்துவிட்டனர். ரெய்டு நடத்த வேண்டுமென்றால் ஆப்கான் சட்டப்படி அரசு நடத்தவேண்டும். இதுதான் எங்களுக்கும் அமெரிக்காவிற்கு இடையே பிளவை ஏற்படுத்துகிறது. இவ்வாறு கர்ஸாய் வாஷிங்டன் போஸ்ட் என்ற பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
கர்ஸாயியின் இந்த அறிக்கை ஆப்கானில் அமெரிக்க கமாண்டர் ஜெனரல் டேவிட் பெட்ரோஸின் கொள்கைகளுக்கும், நிலைப்பாடுகளுக்கும் எதிரானதாகும்.
பிடி!கொல்! என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ள அமெரிக்க கமாண்டர் ஜெனரல் டேவிட் பெட்ராஸ், ஆப்கானில் கூடுதலாக 30 ஆயிரம் அமெரிக்க ராணுவத்தினர் வருகைத் தந்ததன் மூலம் தாலிபான் எதிர்ப்புப் போர் வெற்றிப்பெறும் என்ற உரிமைக் கோருகிறார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஆப்கானில் தாக்குதலின் வீரியத்தைக் குறைக்க அமெரிக்காவுக்கு கர்ஸாயி கோரிக்கை"
கருத்துரையிடுக