5 நவ., 2010

பிரிட்டீஷ் ஆதரவு கொலைக் கும்பல் ஈரானில் கைது

தெஹ்ரான்,நவ.5:ஈரானின் மேற்கு நகரமான மரிவானில் வைத்து பிரிட்டீஷ் ஆதரவு கொலைக்காரக் கும்பல் கைதுச் செய்யப்பட்டுள்ளதாக ஈரானின் ரகசிய புலனாய்வு அமைச்சகம் அறிவித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கிடையே ஈரானில் ஐந்து கொலைகளை நிகழ்த்திய கும்பலில் நான்குபேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ஏராளமான ஆவணங்களும், ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது என அமைச்சகம் கூறியுள்ளது.

கொமாலா என்ற கும்பலைச் சார்ந்த பக்தியார் மிமாரி, ஹஜீர் இப்ராஹிமி, லுக்மான் முராதி, சன்யார் முராதி ஆகியோர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.

ஈராக் நகரமான சுலைமானியாவிலிலுள்ள இக்கும்பலின் கமாண்டர் ஜலீல் ஃபத்தாஹியின் கட்டளைப்படிதான் இவர்கள் செயல்பட்டுள்ளனர். ஜலீல் தற்பொழுது பிரிட்டனில் உள்ளார். ஒவ்வொரு தாக்குதலுக்கும் 2000 அமெரிக்க டாலர் வாக்களிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் உளவு வேலை மட்டுமல்ல, கொலைக்காரக் கும்பல்களுக்கு பணமும், ஆதரவு அளித்துவருகிறது பிரிட்டன் என ஈரானின் ரகசிய புலனாய்வு அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஈரானின் அணுசக்தித் திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர தங்களுடைய உளவாளிகள் ஈரானில் செயல்பட்டு வருவதாக கடந்தமாதம் 28-ஆம் தேதி பிரிட்டீஷ் ரகசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் ஜான் சவேஸ் தெரிவித்திருந்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பிரிட்டீஷ் ஆதரவு கொலைக் கும்பல் ஈரானில் கைது"

கருத்துரையிடுக