5 நவ., 2010

காந்தஹார் ராணுவ நடவடிக்கையில் நூற்றுக்கணக்கான வீடுகள் தகர்க்கப்பட்டதாக மனித உரிமை அமைப்பு

காபூல்,நவ.5:தெற்கு காந்தஹாரில் அந்நிய ஆக்கிரமிப்பு படையினர் தாலிபான் போராளிகளுக்கெதிராக நடத்திய ராணுவ நடவடிக்கையில் நூற்றுக்கணக்கான வீடுகள் தகர்க்கப்பட்டுள்ளது என ஆப்கானின் மனித உரிமை அமைப்பான ஆப்கான் ரைட்ஸ் மானிட்டர்(ஏ.ஆர்.எம்) கூறியுள்ளது.

சமீபத்தில் அமெரிக்கா, ஆப்கானில் சிவிலியன்கள் கொல்லப்படுவது குறைக்கப்படும் என அறிவித்திருந்த பொழுதிலும் அது செயல்படுத்தப்படவில்லை என அவ்வமைப்பு சுட்டிக்காட்டுகிறது.

விமானத் தாக்குதல்கள் மற்றும் கண்ணி வெடித்தாக்குதல்கள் மூலமாகத்தான் வீடுகள் தகர்க்கப்பட்டன.

ராணுவ நடவடிக்கை முடிவுக்கு வந்தால் பெரிய அளவிலான புனர்நிர்மாணம் தேவைப்படும் என ஏ.ஆர்.எம் இயக்குநர் ஸமாதி அஜ்மல் தெரிவித்துள்ளார்.

அரங்கபாத், பான்ஜிவாயி, ஸெராயி, தான் மாவட்டங்கள்தான் அதிக இழப்புகளை சந்தித்துள்ளது. மாகாணத்தில் 10 லட்சம் மக்களில் 3 லட்சம்பேர் வசிப்பது இவ்விடங்களில்தான்.

கடந்த செப்டம்பரில் ராணுவ நடவடிக்கை துவங்கியபிறகு சிவிலியன் மரணங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளதாக அஜ்மல் தெரிவிக்கிறார்.

2010 ஆம் ஆண்டில் முதல் ஆறு மாதங்களில் மட்டுமே கடந்த ஆண்டைவிட 31 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஐ.நா வின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாகாணத்தின் ஒரு டஜனுக்கு அதிகமான வசிப்பிடங்களை மையமாகக் கொண்டதுதான் ஏ.ஆர்.எம் அறிக்கையாகும். ஆனால் இவ்வறிக்கைக்கு பதில் கூற நேட்டோ தயாரில்லை.

ஆபரேசன் ட்ராகன் ஸ்ட்ரைக் என்ற பெயரில் நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கையில் காந்தஹாரில் ஆயிரக்கணக்கான ராணுவத்தினர் பயன்படுத்தப்பட்டனர்.

ராணுவ நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவந்தால் புனர் நிர்மாணத்திற்கு நிதியுதவி அளிக்கப்படும் என மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போராளிகளை காந்தஹாரிலிருந்து விரட்டுவதை நோக்கமாகக் கொண்டுதான் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும் கூட எந்த முன்னேற்றமுமில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "காந்தஹார் ராணுவ நடவடிக்கையில் நூற்றுக்கணக்கான வீடுகள் தகர்க்கப்பட்டதாக மனித உரிமை அமைப்பு"

கருத்துரையிடுக