காபூல்,நவ.30:கிழக்கு ஆப்கானில் நங்கர்ஹார் மாகாணத்தில் பயிற்சியின் போது போலீஸ்காரர் ஒருவர் நேட்டோ படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் ஆறு பேர் மரணமடைந்தனர்.
கொல்லப்பட்டவர்கள் எந்த நாட்டைச் சார்ந்தவர்களென்பதை நேட்டோ தெரிவிக்கவில்லை. ஆனால், கொல்லப்பட்டவர்கள் அமெரிக்கர்கள் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கியால் சுட்ட போலீஸ்காரரும் கொல்லப்பட்டார். ஆப்கன் எல்லைப் படையினர் அணியும் சீருடையில் வந்த நபர்தான் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக நேட்டோவும் ஆப்கான் அரசும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தாலிபான் போராளிகள் போலீஸ் படையில் ஊடுருவியுள்ளதாக கருதப்படுகிறது. போலீஸ் வேடத்தில் வந்து முன்னரும் தாலிபான் போராளிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பக்தியா மாகாணத்தில் கடந்த வாரம் நடந்த தாக்குதலில் 12 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டிருந்தனர். ஹெல்மந்த மாகாணத்தில் நடந்த மற்றொரு துப்பாக்கிச் சூட்டில் முன்னர் ஐந்து பிரிட்டீஷ் படையினர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.
அத்தாக்குதலை நடத்தியவரை இதுவரை கைதுச்செய்ய முடியவில்லை. அந்நிய ஆக்கிரமிப்பு படையினர்தான் ஆப்கான் பாதுகாப்பு படையினருக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். ஆனால், பயிற்சியின்போது அவர்கள் அந்நிய நாட்டு படையினரை தாக்குவது வழக்கமாகியுள்ளது. இத்தகையதொரு சம்பவத்தைக் குறித்து நேட்டோ விசாரித்து வருகிறது.
ஹெல்மந்த் மாகாணத்தில் ராணுவ தலைமையகத்தில் ஒரு ஆப்கான் ராணுவவீரன் மூன்று பிரிட்டீஷ் ராணுவத்தினரை சுட்டுக்கொன்றதுக் குறித்துதான் விசாரணை நடந்து வருகிறது.
வடக்கு ஆப்கானில் ராணுவ மையத்தில் ஆப்கான் ராணுவ வீரர் ஒருவர் அமெரிக்க காண்ட்ராக்டரை சுட்டுக் கொன்றது ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த நிகழ்வாகும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஆப்கான்:ஆறு நேட்டோ படையினரை சுட்டுக்கொன்ற போலீஸ்காரர்"
கருத்துரையிடுக