1 டிச., 2010

விக்கிலீக்ஸ்:ஜூலியன் அஸன்ஜாவுக்கு புகலிடம் அளிக்க தயார் -ஈக்வடார்

க்விட்டோ,டிச.1:விக்கிலீக்ஸ் இணையதள அதிபர் ஜூலியன் அஸன்ஜாவுக்கு நிபந்தனைகளற்ற அபயம் அளிக்க தயார் என ஈக்வடார் நாடு அறிவித்துள்ளது.

எவ்வித பிரச்சனைகளோ கட்டுப்பாடுகளோ இல்லாத வசிப்பிட வசதிகளை தயாராக இருப்பதாக ஈக்வடார் நாட்டு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கின்றோ லூக்காஸ் அறிவித்துள்ளார்.

நாங்கள் அவரை ஈக்வடார் நாட்டிற்கு அழைக்கப் போகிறோம். அவர் இணையதளங்களில் மட்டுமல்ல பொது இடங்களிலும் அவர் வசமிருக்கும் தகவல்களை வெளியிட நாங்கள் அனுமதி வழங்குவோம் என லூக்காஸ் தெரிவித்தார்.

பல்வேறு நாடுகளின் தகவல்களை சேகரிப்பதின் இருண்ட மூலைகளில் வெளிச்சம் வீசும் அஸன்ஜா போன்றவர்களுக்கு எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் என லூக்காஸ் தெரிவித்தார்.

அமெரிக்க தூதரக அதிகாரிகளை உளவு வேலைக்காக ஈடுபடுத்துவது கவலையை அளிப்பதாக மேலும் அவர் தெரிவித்தார். தங்களின் வசமிருக்கும் ரகசிய ஆவணங்களில் 1621 ஆவணங்கள் ஈக்வடார் நாட்டின் தலைநகரான க்விட்டாவிலுள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து அனுப்பப்பட்டவை என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டிருந்தது.

ஈக்வடார் நாட்டின் இடதுசாரி அரசு அமெரிக்காவின் முக்கிய எதிரியாகும். 2009 ஆம் ஆண்டு சி.ஐ.ஏவுக்காக உளவுவேலைப் பார்த்ததாக குற்றஞ்சாட்டி இரண்டு அமெரிக்க தூதரக அதிகாரிகளை ஈக்வடார் வெளியேற்றியிருந்தது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "விக்கிலீக்ஸ்:ஜூலியன் அஸன்ஜாவுக்கு புகலிடம் அளிக்க தயார் -ஈக்வடார்"

கருத்துரையிடுக