19 நவ., 2010

அமெரிக்காவின் சுகாதாரத்துறை வீழ்ச்சியில்

வாஷிங்டன்,நவ.19:அதிகரித்து வரும் செலவின் காரணமாக அமெரிக்காவில் சுகாதாரத் துறை இக்கட்டான சூழலில் உள்ளதாக தகவல்.

நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் காமன்வெல்த் ஃபண்ட் 11 பணக்கார நாடுகளில் நடத்திய ஒப்பீட்டு ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

செலவு கூடியதால் மூன்றில் ஒரு பகுதி அமெரிக்கர்களும் தங்களது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில்லை எனக் கூறும் இந்த ஆய்வு அறிக்கை ஹெல்த் அஃபேர்ஸ் ஜெர்னல் என்ற பத்திரிகையில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. உடல்நல பரிசோதனைக்காக அதிக தொகை செலுத்துபவர்கள் அமெரிக்கர்களே. ஆனால், இதர பணக்கார நாடுகளுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க குடிமக்கள் மகிழ்ச்சியில் இல்லை என்பது இவ்வாய்வில் தெரியவந்துள்ளது.

ஆஸ்திரேலியா, பிரிட்டன், நெதர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, நியூசிலாந்து, நார்வே, ஸ்வீடன், சுவிட்சர்லாந்து ஆகிய பணக்கார நாடுகளுடன் அமெரிக்க சுகாதாரத்துறை ஒப்பீடுச் செய்யப்பட்டது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அமெரிக்காவின் சுகாதாரத்துறை வீழ்ச்சியில்"

கருத்துரையிடுக