20 நவ., 2010

தாரிக் அஸீஸை தூக்கிலிடக் கோரும் உத்தரவில் கையெழுத்திடமாட்டேன் - ஜலால் தலபானி

பாக்தாத்,நவ.20:முன்னாள் ஈராக் அதிபர் சதாம் ஹுசைனின் வலங்கரமாக செயல்பட்ட கிறிஸ்தவ சமூகத்தைச் சார்ந்த தாரிக் அஸீஸை தூக்கிலிடக் கோரும் ஈராக் அரசின் உத்தரவில் கையெழுத்திட மாட்டேன் என அந்நாட்டு அதிபர் ஜலால் தலபானி அறிவித்துள்ளார்.

பிரான்சு 24 தொலைக்காட்சி அலைவரிசைக்கு பேட்டியளித்த தலபானி இதனை தெரிவித்துள்ளார்.இது போன்றதொரு உத்தரவில் என்னால் கையெழுத்திட முடியாது. காரணம், நான் ஒரு சோஷியலிஸ்ட் ஆவேன். அதுமட்டுமல்ல தாரிக் அஸீஸ் ஒரு ஈராக் கிறிஸ்தவர் என்பதால் அவர் மீது எனக்கு பரிவு உண்டு. 70 வயது முதிர்ந்த தாரிக் அஸீஸிற்கு தூக்குத் தண்டனை விதிக்க என்னால் இயலாது என அவர் மேலும் தெரிவித்தார்.

சதாம் ஹுசைன் ஆட்சியில் துணை பிரதமராக பணியாற்றிய தாரிக் அஸீஸ் ஷியா பிரிவு முஸ்லிம்களை கூட்டுப் படுகொலைச் செய்வதற்கு உறுதுணையாக இருந்தார் எனக் குற்றஞ்சாட்டி கடந்த அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி நீதிமன்றம் அவருக்கு மரணத்தண்டனை விதித்தது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "தாரிக் அஸீஸை தூக்கிலிடக் கோரும் உத்தரவில் கையெழுத்திடமாட்டேன் - ஜலால் தலபானி"

கருத்துரையிடுக