19 நவ., 2010

எடியூரப்பாவின் பதவி தப்புமா?

பெங்களூர்,நவ.19:கர்நாடகா மாநில பா.ஜ.க முதல்வர் எடியூரப்பா தனது மகன்களுக்கு அரசு நிலத்தை ஒதுக்கீடுச் செய்ததில் ஆறாயிரம் கோடிக்கு ஊழல் நடந்திருப்பதாக மதசார்பற்ற ஜனதாதளத்தின் தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி குற்றஞ்சாட்டியிருந்தார்.

ஆனால், இதனை எடியூரப்பா மறுத்து வந்தார். இந்நிலையில் மேலும் ஆதாரங்களை குமாரசாமி வெளியிட்டுள்ள நிலையில் எடியூரப்பாவின் பதவி நீடிப்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

நில ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ள சூழலில் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளா எடியூரப்பா. நில ஊழலில் சிக்கியுள்ள எடியூரப்பா ராஜினாமாச் செய்யவேண்டும் என கர்நாடகா பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஜி.பரமேஷ்வரா கோரியுள்ளார்.

இரண்டு வருட ஆட்சியில் குடும்ப உறுப்பினர்களுக்கு நிர்மாணத்திற்காகவும், விவசாயத் தேவைகளுக்காகவும் நிலம் ஒதுக்கியது உள்ளிட்ட ஆயிரக்கணக்கான கோடி ரூபாயின் ஊழலை புரிந்துள்ளார் எடியூரப்பா என குமாரசாமி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் அதிகாரப்பூர்வமாக புகார் அளிக்காத பட்சத்தில் இதுக்குறித்து விசாரணைக்கு உத்தரவிட இயலாது என கர்நாடகா லோகயுக்தா என்.சந்தோஷ் ஹெக்டே தெரிவித்துள்ளார்.

தன் மீது பா.ஜ.க கட்சித் தலைவர் நிதின் கட்காரி மற்றும் ஆர்.எஸ்.எஸிற்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் செய்திகளை மறுத்துள்ளார் எடியூரப்பா.

அதேவேளையில் கர்நாடகாவில் நிலைமைகளை கவனிக்க கட்காரி அம்மாநிலத்திற்கு வருகிறார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "எடியூரப்பாவின் பதவி தப்புமா?"

கருத்துரையிடுக