பெங்களூர்,நவ.23: பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கேரள மாநில பி.டி.பி கட்சி தலைவர் அப்துல் நாஸர் மஃதனியின் நீதிமன்றக் காவல் டிசம்பர் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அப்துல் நாஸர் மஃதனியின் சிறை அறையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை அப்புறப்படுத்த வேண்டுமெனக்கோரி வழக்கறிஞர உஸ்மான் மூலமாக சமர்ப்பிக்கபட்ட மனுவை நீதிமன்றம் தள்ளுபடிச் செய்தது.
பாதுகாப்பு விவகாரங்களில் தன்னால் தலையிட முடியாது என கூடுதல் முதன்மை மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்ட்ரேட் வெங்கடேஷ் ஹுலாகி தெரிவித்தார்.
வீடியோ கான்ஃப்ரன்சிங் மூலமாக ஆஜர்படுத்தப்பட்ட இதர 13 கைதிகளின் நீதிமன்றக் காவலும் டிசம்பர் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்குத் தொடர்பாக கர்நாடக பா.ஜ.க அரசால் குற்றஞ்சாட்டப்பட்ட 32 பேரில் 14 பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "அப்துல் நாஸர் மஃதனி:நீதிமன்ற காவல் நீட்டிப்பு"
கருத்துரையிடுக