புதுடெல்லி,நவ.23:பாராளுமன்றம் தொடர்ந்து எதிர்கட்சிகளால் முடங்கிவருவதை தவிர்த்து சுமூகமாக நடத்துவதற்கு பிரணாப் முகர்ஜியால் அழைக்கப்பட்ட அனைத்துக்கட்சிக் கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது.
ஸ்பெக்ட்ரம் ஊழலைக் குறித்து விசாரிக்க பாராளுமன்றக் கூட்டுக் குழுவை அமைக்கும் வரை ஓயமாட்டோம் என எதிர்கட்சிகளும், சி.ஏ.ஜி அறிக்கையின் மீதான பாராளுமன்ற அக்கவுண்ட்ஸ் கமிட்டி விசாரணை பூர்த்தியாகாதவரை இதர விசாரணைக்கு சாத்தியமில்லை என மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசும் இறங்கி வராததால் அனைத்துக்கட்சி கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது.
ஆனால் கூட்டத்தில் கலந்துக் கொண்ட தி.மு.க உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் பாராளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை நடத்தலாம் என்ற நிலைப்பாட்டை கைக் கொண்டுள்ளதால் எதிர்கட்சிகளின் நிர்பந்தத்திற்கு அரசு ஒப்புக்கொள்ளும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சோனியாகாந்தி தலைமையில் கூடிய காங்கிரஸ் மத்திய கமிட்டியின் கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவருடன் பேசவும், அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டவும் பிரணாப் முகர்ஜியிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இதன்படி பிரணாப் மக்களவை எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பேச்சுவார்த்தையின் அடிப்படையில் நேற்று மதியம் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை விசாரிக்கும் அனைத்து ஏஜன்சிகளின் அறிக்கைகளை பாராளுமன்ற அக்கவுண்ட்ஸ் கமிட்டியின் பரிசீலனைக்கு வைக்கலாம் என்ற கோரிக்கையை பிரணாப் முன்வைத்தார். ஆனால் எதிர்கட்சியினர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. பாராளுமன்றக் கூட்டுக்குழுவின் விசாரணைதான் தேவை என்ற முடிவில் எதிர்கட்சியினர் பிடிவாதமாக இருந்தனர்.
பாராளுமன்ற கமிட்டி விசாரிப்பதில் ஆட்சேபனை இல்லை என்ற நிலைப்பாட்டை தி.மு.க பிரதிநிதி டி.ஆர்.பாலு எம்.பி ஏற்றுக்கொண்டார். இக்கூட்டத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களையெல்லாம் பிரதமரிடம் கூறி, பின்னர் பரிசீலனைச் செய்து உரிய முடிவை அரசு அறிவிக்கும் என பிரணாப் தெரிவித்தார்.
எதிர்கட்சியினர் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கோரும் பொழுது அது தேவையில்லை என பிடிவாதம் பிடிக்கவேண்டாம் என்பது சில மூத்த காங்கிரஸ் தலைவர்களின் நிலைப்பாடாகும்.
கடந்த ஒன்பதாம் தேதி துவங்கிய பாராளுமன்ற குளிர்கால கூட்டம் துவங்கிய பொழுதிலும் எதிர்கட்சியினரின் அமளியால் பாராளுமன்றத்தின் இரு அவைகளையும் தொடர்ந்து நடத்தமுடியவில்லை. ஏற்கனவே அரசு இதுத் தொடர்பாக கூட்டிய அனைத்து கட்சி கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "அனைத்துக்கட்சிக் கூட்டம் தோல்வியில் முடிந்தது: பிடிவாதத்தை அரசு கைவிடும் என எதிர்பார்ப்பு"
கருத்துரையிடுக