10 நவ., 2010

ராமர் கோயில் கட்டுவதற்கு நிலத்தை ஒப்படையுங்கள்: மக்களவையில் பாஜக வலியுறுத்தல்

புதுடெல்லி,நவ.10:அலாகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி அயோத்தியில் உள்ள நிலத்தை ராமர் கோயில் கட்டுவதற்கு வழங்க வேண்டும் என்று மக்களவையில் பாஜக வலியுறுத்தியது.

மக்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தைத் தொடர்ந்து நடந்த விவாதத்தில் பாஜக உறுப்பினர் யோகி ஆதித்யநாத் ராமர் கோயில் விவகாரம் குறித்துப் பேசினார். உண்மையின் அடிப்படையிலும் ஆதாரங்களின் அடிப்படையிலும் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடமே ராமர் பிறந்த இடம் என்று அலாகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீதிமன்ற தீர்ப்பு எதுவோ அதை ஏற்று செயல்படுத்துவோம் என்று 1993 ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதியளித்தது. அதை தற்போது நிறைவேற்ற வேண்டும். இப்போது ராமர் சிலை வைத்து வழிபடும் இடத்தை ஹிந்து மகாசபையிடம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. அதன்படி அந்த இடத்தை ராமர் கோயில் கட்டுவதற்கு வழங்க வேண்டும் என்றார் அவர். யோகி ஆதித்யாநாத்தின் கோரிக்கைக்கு சமாஜ்வாதி உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ராமர் கோயில் கட்டுவதற்கு நிலத்தை ஒப்படையுங்கள்: மக்களவையில் பாஜக வலியுறுத்தல்"

கருத்துரையிடுக