ப்ரஸ்ஸல்ஸ்,நவ.15:அந்நிய ஆக்கிரமிப்பு படையினரால் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு நிலைமை மேலும் சீர்கெட்டுள்ளதாக ஐரோப்பிய யூனியனின் அறிக்கை கூறுகிறது.
10 வருடகாலம் சர்வதேச நாடுகளின் தலையீடு ஆப்கானில் இருந்த பொழுதிலும் அங்கு பாதுகாப்பு, சமூக, பொருளாதார சூழல்களை மேலும் சீர்குலைந்துள்ளது என்பதை ஐரோப்பிய யூனியனும், கூட்டணி நாடுகளும் உணரவேண்டும்.
ஆப்கானிகளை பூரணமாக கவனத்தில் கொண்டு அந்நாட்டைவிட்டு வாபஸ் பெறவேண்டும் என்பதை ஐரோப்பிய பாராளுமன்றத்தின் வெளிநாட்டு விவகார கமிட்டி சுட்டிக்காட்டியுள்ளது.
10 வருடங்கள் நீண்ட போர் குறித்த அறிக்கையில் ஆப்கான் போர் தோல்வியடைந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆப்கானிலிருந்து வாபஸ் பெறுவதற்கான நேரம் நெருங்கிவிட்டது. ஐரோப்பிய யூனியனின் கொள்கைகளில் பூரணமான மறுபரிசீலனை அத்தியாவசியமானதாகும். ராணுவத் தலையீட்டினால் பலனில்லை என்பதை அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் புரிந்துக்கொள்ள வேண்டும்.
அமெரிக்காவையும் அதன் கூட்டணி நாட்டுப் படைகளையும் ஆக்கிரமிப்பு படையினராகத்தான் அந்நாட்டு மக்கள் கருதுகின்றனர். தாலிபானின் பலத்தை குறைவாக மதிப்பிட்டு, அதிபர் கர்ஸாயியின் அரசின் திறமையில் அதீத நம்பிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆப்கானில் பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு ஆப்கான் தலைவர்களையும், தாலிபான்களையும் உட்படுத்தவேண்டும்.
கடந்த ஒன்பது ஆண்டுகால ஆப்கான் போரின் செலவு 30 ஆயிரம் கோடி டாலராகும். இது ஆப்கானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட 20 மடங்கு அதிகமாகும். அமெரிக்கா ராணுவ உபகரணங்களின் விநியோகத்தை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்துள்ளது. இதன் மூலம் வழிப்பறியும், ஊழலும் அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் 200 முதல் 300 கோடி வரையிலான ராணுவ வியாபாரத்தின் பெரும் பங்கும் உள்ளூர் மாஃபியாக்கள், யுத்தபிரபுக்கள், தாலிபான் கமாண்டர்கள் ஆகியோரின் கரங்களில் சென்றடையும். இவ்வாறு அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதேவேளையில், ஆப்கான் போர் தந்திரங்களில் சமீப காலங்களில் மாற்றங்கள் ஒன்றும் ஏற்படவில்லை என்பதை அமெரிக்காவின் நிலைப்பாடுகள் சுட்டிக்காட்டுகின்றன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "அந்நிய நாட்டு ராணுவத்தினர் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பை சீர்குலைத்துவிட்டனர் - ஐரோப்பிய யூனியன்"
கருத்துரையிடுக