
40 ஏக்கர் நிலத்தில் திறந்துவிடப்பட்ட ஆண் கொசுக்கள் அதே இனத்தைச் சார்ந்த பெண் கொசுக்களுடன் இணை சேரும். இதனால் பெண் கொசு குஞ்சுகளை உற்பத்திச் செய்யும் தன்மையை அக்கொசுக்கள் இழந்துவிடும். இதுதான் அத்திட்டம்.
பெண் கொசுக்கள் மட்டுமே மனிதனை கடித்து நோயை பரவச் செய்கின்றன. மே மாதம் முதல் அக்டோபர் வரை கட்டங்கட்டமாக கொசுக்கள் திறந்து விடப்பட்டன. ஆகஸ்ட் மாதத்தில் இதர பகுதிகளை தவிர்த்தால் இப்பகுதியில் கொசுக்களின் எண்ணிக்கை 80 சதவீதம் குறைந்துவிட்டதாக டெய்லி மெயில் பத்திரிகை கூறுகிறது.
கேமான் தீவுகளில் நடத்திய பரிசோதனை மிகப்பெரிய மைல்கல் என பென்சில்வானியா பல்கலைக்கழகத்தின் உயிரியல் மற்றும் விலங்கியல் துறை பேராசிரியர் ஆண்ட்ரூ ரீட் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஐந்து கோடி பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார மைய புள்ளி விபரம் கூறுகிறது. இதற்கான சிகிட்சையோ தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லை. டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் பகல் வேளைகளிலும் கடிப்பதால் கொசுவலைகளால் பயனில்லை.
பிரிட்டனில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆக்ஸிடெக் என்ற நிறுவனம்தான் மரபணு மாற்றம் செய்யப்பட்ட மலட்டுத் தன்மையை உருவாக்கும் கொசுக்களை உருவாக்கியது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "டெங்கு காய்ச்சலை எதிர்ப்பதற்கு மரபணு மாற்றம் செய்யப்பட்ட கொசுக்கள்"
கருத்துரையிடுக