15 நவ., 2010

நம்பிக்கையை கைவிட்டு விடாதீர்கள், போராட்டம் தொடரும் - சூகி

ரங்கூன்,நவ.15:நம்பிக்கையை கைவிட்டுவிடக் கூடாது எனவும், மனித உரிமைகளுக்காகவும் சட்ட தனது போராட்ட தொடரும் என ராணுவ ஆட்சியின் சிறைக் காவலிலிருந்து விடுதலையான மியான்மரின் ஜனநாயக போராட்ட நாயகியான ஆங்சான் சூகி தெரிவித்துள்ளார். ரங்கூனில் கட்சி தலைமையகத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார் அவர். கடந்த சனிக்கிழமை நீண்டகால சிறைவாசத்திற்கு பிறகு விடுதலைச் செய்யப்பட்டார் சூகி.

மனித உரிமைகள் மற்றும் சட்டக்கட்டமைப்பில் நம்பிக்கை வைத்திருப்பதாக கூறிய சூகி, ராணுவ ஆட்சியாளரை நேரடி விவாதத்திற்கு அழைப்பு விடுத்தார்.
மியான்மரில் ஜனநாயகம் மலர அனைத்து மக்களின் ஆதரவு தேவை என அழைப்பு விடுத்த சூகி தேசிய நலன் கருதி சமரசத் திட்டத்திற்கு தயார் என கூறினார்.

கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகைத் தந்த சூகியை அவருடைய ஆதரவாளர்கள் மொய்த்தனர். தங்கள் அன்பை வெளிப்படுத்தும் கோஷங்களை எழுப்பினர். நாங்கள் உங்களை நேசிக்கிறோம் என உரக்கக் கூறினர்.

அதேவேளையில், சூகியின் விடுதலைக்கு ராணுவ ஆட்சியாளர்கள் நிபந்தனைகள் விதிக்கவோ, அவருடைய செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கவோ செய்யவில்லை என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

தனக்கு யாரோடும் பகையோ துவேசமோ இல்லை எனவும், சிறையில் தான் நன்றாக நடத்தப்பட்டதாகவும் சூகி வெளியிட்டுள்ள அறிக்கை ஊகங்களை கிளப்பியுள்ளது.

முன்பு போல ராணுவ ஆட்சிக்கு சவால் விடுக்கும் விதமாக சூகி இனி செயல்படுவாரா? என்பதுக் குறித்து சந்தேகத்தில் ஆழ்ந்துள்ளனர் அரசியல் பார்வையாளர்கள்.

ராணுவ ஆட்சியாளர்களால் சிறையிலடைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலைக்காக பிரார்த்திப்பதாக சூகி தெரிவித்துள்ளார்.

'எனது மக்கள் சுதந்திரத்தை பெறவில்லையெனில் நான் சுதந்திரமானவள் என எவ்வாறு கூறிய இயலும்?' என உணர்ச்சிப் பொங்க கேள்வி எழுப்புகிறார் சூகி.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "நம்பிக்கையை கைவிட்டு விடாதீர்கள், போராட்டம் தொடரும் - சூகி"

கருத்துரையிடுக