புதுடெல்லி,நவ.8:ராணுவத்தின் சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெறுவதில் தவறில்லை என கஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.
சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெறுவதால் அவசர காலக்கட்டங்களில் ராணுவத்தை வரவழைப்பதற்கு இடையூறு ஏற்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுத் தொடர்பாக உமர் அப்துல்லாஹ் கூறியதாவது: சிறப்பு அதிகாரச்சட்டத்தை வாபஸ்பெறுவதுக் குறித்து விவாதிப்பதற்காக உயர்மட்ட கூட்டம் கூட்டப்படும்.
கஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்பு படையினரின் ஆதிக்கத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் முதல் நடவடிக்கையாக பதினொன்றுக்கும் மேற்பட்ட பங்கர்கள் நீக்கப்பட்டுள்ளன.
சிறப்பு அதிகாரச்சட்டத்தை முதலிலேயே முற்றிலும் நீக்குவது என்பது சாத்தியமற்றதாகும். கஷ்மீர் பிரச்சனையை தீர்ப்பதற்காக மத்திய அரசு நியமித்துள்ள மூன்று உறுப்பினர்களைக் கொண்ட மத்தியஸ்த குழுவைக் குறித்து எனக்கு திருப்திதான்.
இக்குழுவில் உயர் அரசியல் தலைவரை உட்படுத்தியிருக்க வேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. மத்தியஸ்த குழுவினர் குறைந்த நாட்களிலேயே சுதந்திரமாக கருத்து தெரிவித்துள்ளனர். இதனை அரசியல்வாதிகளால் செய்ய முடியுமா? மக்கள் சுதந்திரத்தை கேட்பதற்கு காரணம், பாதுகாப்பு படையினரின் அச்சுறுத்தல் மற்றும் சோதனைகளிலிருந்து விடுபடத்தான். ஊழலிருந்து விடுதலையையும் மக்கள் சுதந்திரமாக கருதுகின்றனர். இவ்வாறு உமர் அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ராணுவத்தின் சிறப்பு அதிகாரத்தை வாபஸ் பெறுவதில் தவறில்லை: உமர் அப்துல்லாஹ்"
கருத்துரையிடுக