ராமல்லா.நவ.8:ஃபலஸ்தீனில் அல்நகாபில் ரஹத் கிராமத்தில் அமைந்திருந்த மஸ்ஜித் ஒன்றை அனுமதியில்லாமல் கட்டப்பட்டதாக கூறி இஸ்ரேலிய ராணுவம் இடித்துத் தள்ளியுள்ளது.
அல் ஸஹ்வா என்றழைக்கப்படும் இம்மஸ்ஜிதை மீண்டும் நிர்மாணிப்பதற்கான முயற்சியில் இஸ்லாமிய அமைப்புகளும், அக்கம்பக்கத்து கிராமத்தைச் சார்ந்த முஸ்லிம்களும் ஈடுபட்டுள்ளனர்.
24 மணி நேரத்திற்குள் மஸ்ஜித் நிர்மாணிக்கும் பணி முடிவடையும் என உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
இதற்கிடையே கிராமவாசிகளும், இஸ்ரேலிய ராணுவமும் பல இடங்களில் மோதலில் ஈடுபட்டனர்.
கால்பந்து மைதானத்திற்கு அருகில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு 40 சதுர அடி நிலத்தில் மஸ்ஜித் கட்டப்பட்டது.
போதைப்பொருள் வியாபாரத்திற்கு பிரசித்திப் பெற்ற இக்கிராமத்தில் அதனை தடுக்கும் நோக்கத்திலும் அக்கிராமவாசிகள் மஸ்ஜிதை கட்டினர். அதிகாரப்பூர்வமாக அனுமதி அளிக்க மனு அளித்திருந்த போதிலும் அதிகாரிகள் அதனை நிராகரித்துவிட்டனர்.
நேற்று காலை புல்டோசர்களுடன் கிராமத்திற்கு வந்த இஸ்ரேலிய ராணுவம் ஊர்மக்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் மஸ்ஜிதை இடித்துத் தள்ளியது.
இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு ஒன்றுகூடினர். ராணுவத்தின் மீது கல்வீச்சு நடைப்பெற்றது. ஊர்மக்கள் கலைந்து செல்ல ராணுவம் கண்ணீர் புகைக்குண்டை பயன்படுத்தியது. ஏராளமானோரை ராணுவம் கைதுச் செய்தது.
கடந்த ஏப்ரல் மாதம் அதிகாரிகள் மஸ்ஜிதை இடிக்க உத்தரவிட்டிருந்தனர்.இதற்கெதிராக நீதிமன்றத்தை அணுகிய கிராமவாசிகளின் மனுவை கடந்த ஜூலையில் நீதிமன்றம் தள்ளுபடிச் செய்தது.
இஸ்ரேல் பொறுப்புணர்வுடன் நடந்துக்கொள்ள வேண்டுமென ரஹத் நகராட்சி தலைவர் ஃபயாஸ் அபூ ஸுஹைபான் தெரிவித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஃபலஸ்தீனில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களால் தரைமட்டமாக்கப்பட்ட பள்ளிவாசல்"
கருத்துரையிடுக