ஜெருசலேம்,நவ.8:2006-ல் லெபனானில் ஆக்கிரமித்தப் பகுதியை அந்நாட்டிடமே திருப்பி ஒப்படைக்க இஸ்ரேல் முடிவெடுத்துள்ளது.
லெபனானின் வடக்குப் பகுதி கிராமத்தில் இருந்து தமது படையை வாபஸ் பெறுவதற்கான திட்டத்தை ஐ.நா.விடம் அளிக்க இஸ்ரேல் முடிவெடுத்துள்ளது.
2006-ல் லெபனான் கிராமத்தை ஆக்கிரமித்த போதே அந்தக் கிராமம் திருப்பி ஒப்படைக்கப்படும் என்று இஸ்ரேல் உறுதி அளித்திருந்தது. ஆனால் எப்போது திருப்பி அளிக்கப்படும் என்பது குறித்து எவ்வித உறுதியும் கொடுக்கவில்லை. 4 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் ஆக்கிரமித்தப் பகுதியை லெபனானிடம் திருப்பி ஒப்படைக்க இஸ்ரேல் இப்போது திட்டமிட்டுள்ளது.
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நாடு திரும்பியதும் அமைச்சர்கள் கூட்டத்தை கூட்டி, லெபனான் கிராமத்தில் இருந்து படையை வாபஸ் பெறுவது தொடர்பான திட்டத்துக்கு ஒப்புதல் பெறுவார். அதை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனிடம் அளிப்பார் என்று அந்நாட்டின் அரசு அலுவலர்கள் தெரிவித்தனர்.

0 கருத்துகள்: on "லெபனானிடம் ஆக்கிரமித்த பகுதியை திரும்ப ஒப்படைக்க இஸ்ரேல் முடிவு"
கருத்துரையிடுக