7 நவ., 2010

நாடு தழுவிய தர்ணா:ஆர்.எஸ்.எஸ். அறிவிப்பு

ஐதராபாத்,நவ.7:நாடு தழுவிய அளவில், வரும் 10ம் தேதி தர்ணா போராட்டம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அழைப்பு விடுத்துள்ளது.

இதுக்குறித்து, ஆர்.எஸ்.எஸ்.-ன் செய்தி தொடர்பாளர் ராம் மாதவ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: "ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்திற்கு எதிராகவும், இந்துக்களுக்கு எதிராகவும் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு அரசு தவறான தகவல்களை பரப்பி வருகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதை செய்கிறது.

அஜ்மீரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான குற்றப் பத்திரிகையில், எங்களது இயக்கத் தலைவர் தேவேந்திர குப்தாவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களில் எங்களது இயக்கத்தை சேர்ந்தவர்கள் மீது அடிப்படை ஆதாரம் இல்லாம் குற்றம்சாட்டும் போக்கு தொடர்கிறது. இதை கண்டிக்கும் வகையில், வரும் 10ம் தேதி நாடு தழுவிய அளவில் தர்ணா போராட்டம் நடத்துகிறோம்.

அனைத்து மாநில மற்றும் மாவட்ட தலைநகரங்களில் தர்ணா போராட்டம் நடக்கும்." இவ்வாறு ராம் மாதவ் கூறினார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "நாடு தழுவிய தர்ணா:ஆர்.எஸ்.எஸ். அறிவிப்பு"

கருத்துரையிடுக