11 நவ., 2010

பாக்தாதில் கிறிஸ்தவர்கள் பகுதியில் தாக்குதல்: மூன்று பேர் மரணம்

பாக்தாத்,நவ.11:ஈராக் தலைநகரான பாக்தாதில் கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நடைப்பெற்ற குண்டுவெடிப்பு மற்றும் மோர்ட்டார் தாக்குதல்களில் 3 பேர் கொல்லப்பட்டனர். 24 பேர்கள் காயமடைந்தனர்.

கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் ஆறு மாவட்டங்களில் தாக்குதல்கள் நடைப்பெற்றுள்ளன. இரண்டு கிரேனேடுகளும், பத்துக்கும் மேற்பட்ட நாட்டு வெடிக்குண்டுகளும் வீடுகள் மீது வீசப்பட்டதாக எ.எஃப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய பாக்தாதில் கேம்ப் ஸாரா, சினா ஸ்ட்ரீட், அல்கதீர் ஆகிய இடங்களில் தாக்குதல் நடைப்பெற்றுள்ளது. கொல்லப்பட்டவர்கள் கிறிஸ்தவர்களா? என்பதுக் குறித்து உறுதிச் செய்யப்படவில்லை.

ஈராக்கில் கிறிஸ்தவர்கள் அந்நாட்டை விட்டு வெளியேற லண்டன் ஆர்ச் பிஷப் நேற்று முன்தினம் அழைப்பு விடுத்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு பாக்தாதில் ஒரு சர்ச்சிற்கு வந்த நபர்களை போராளிகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். இத்துடன் தொடர்புடையதுதான் இந்த புதிய சம்பவங்களுக்கு பின்னணியில் உள்ளதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாக்தாதில் கிறிஸ்தவர்கள் பகுதியில் தாக்குதல்: மூன்று பேர் மரணம்"

கருத்துரையிடுக