வாஷிங்டன்,நவ.11:கலிஃபோர்னியாவின் கடற்பிரதேசத்தில் அமெரிக்கா ஏவுகணை ஏவி பரிசோதித்ததை சில ஊடகங்கள் ஆதாரத்துடன் வெளியிட்ட செய்தியில் மர்மம் நீடிக்கிறது.
ஆனால்,இச்செய்தியைக் குறித்து தங்களுக்கு ஒன்றும் தெரியாது என பெண்டகன் கூறுகிறது.
கடற்கரையிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. நீரிலிருந்து ஏவுகணை பாய்ந்து செல்லும்போது உருவாகும் புகைமண்டலம் அடங்கிய காட்சியை சி.பி.எஸ் நியூஸின் ஹெலிகாப்டர் படம் பிடித்துள்ளது.
வழக்கமாக அமெரிக்கா ஏவுகணை பரிசோதனை நடத்த வேண்டுமானால் பல்வேறு துறைகளின் அனுமதி மற்றும் முன்னறிவிப்பும் தேவை. ஆனால், எந்தத் துறையும் இதுக் குறித்து அறிந்துள்ளதாக தெரிவிக்கவில்லை.
கரையிலிருந்தா அல்லது கடலிலிருந்தா ஏவுகணை ஏவப்பட்டது என்பதுக் குறித்தும் உறுதிச் செய்யப்படவில்லை.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "அமெரிக்கா நடத்திய ஏவுகணை பரிசோதனையின் மர்மம் நீடிப்பு"
கருத்துரையிடுக