11 நவ., 2010

அஸ்ஸாமில் மீண்டும் தாக்குதல்: 24 பேர் மரணம்

குவஹாத்தி,நவ.11:அஸ்ஸாமில் தேசிய ஜனநாயக போடோலாண்ட் முன்னணி(என்.டி.எஃப்.பி) தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதலை நடத்திவருகின்றனர்.

கோக்ரஜார் மாவட்டத்தில் ஹிந்தி மொழியில் பேசிய ஒரு பெண்மணி நேற்று குண்டடிப்பட்டு இறந்துபோனார். இத்துடன் கடந்த 3 தினங்களாக அஸ்ஸாமில் தொடரும் தாக்குதலில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.

தாக்குதலில் ஈடுபட்டவர்களைக் குறித்து தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ள பாதுகாப்பு படையினர் மீது இன்னொரு பிரிவினர் துப்பாக்கியால் சுட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளையில், அஸ்ஸாம்-அருணாச்சல பிரதேச எல்லையில் செயல்படும் போடோ தீவிரவாதிகள் மீது தாக்குதலை வலுப்படுத்த ஒருங்கிணைந்த கமாண்டின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

குவஹாத்தியில் நடந்த சோதனையில் சி.ஆர்.பி.எஃப், போலீஸ் குழுவினர் வெடிப்பொருட்களுடன் இரண்டு போடோ தீவிரவாதிகளை கைதுச் செய்தனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "அஸ்ஸாமில் மீண்டும் தாக்குதல்: 24 பேர் மரணம்"

பெயரில்லா சொன்னது…

போடா இயக்கத்தவர்களை தீவிரவாதிகள் என்று எழுத தேவையில்லை. அப்படி நடுநிலை கருதி எழுதுவாதாக இருந்தால் இந்திய ராணுவம் காஷ்மீரில் பண்ணுவது மிகபெரிய தீவிரவாதம். காஷ்மீர் குறித்து எழுதும் போது இந்திய அரசு தீவிரவாத ராணுவத்தினர் என்று எழுதவேண்டி வரும். அசாமில் என்ன நடக்கிறதோ எது நடந்தாலும் அதற்க்கு இந்த பத்திரிக்கைகளும், போலீஸ் சேர்ந்து போடாதலையில் போடுவார்கள். இந்தியாவில் இத்தனை பிரிவினை சக்திகள் செயல்பட்டும் இவர்கள் திருந்தாமல் தேசபக்தியோடு செயல்பட்டு வரும் முஸ்லிம்கள் விசயத்தில் பாபர் மசூதி விசயத்தில் சரியான தீர்ப்பு வழங்கவில்லை. இவர்களுக்கு ஒரு போடா இயக்கம் போதாது இந்தியா முழுவது இது போல் ஆயிரம் ஆயிரம் பிரச்சனைகள் எதிர் காலத்தில் இவர்களுக்கு வரவேணும் இல்லையேல் இந்தியாவை இன்னொரு ஸ்பெயின் ஆகிவிடுவார்கள்.

கருத்துரையிடுக