சூரி(மேற்குவங்காளம்),நவ.11:பிர்பம் மாவட்டத்தில் சுச்சூர் கிராமத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் 11 பேரை அநியாயமாக படுகொலைச் செய்த 42 சி.பி.எம் கட்சியின் தொண்டர்கள் குற்றவாளிகள் என நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
துணை மாவட்ட செசன்ஸ் நீதிபதி பிஷ்வநாத் கோனார் இன்று தண்டனையை அறிவிப்பார் .23 பேர் இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களை வெட்டியும், தாக்கியும் கொன்றதாக 82 சி.பி.எம் தொண்டர்களை குற்றவாளிகளாக இணைத்து போலீஸ் வழக்குப்பதிவுச் செய்திருந்தது.
குற்றவாளிகளாக கண்டறிந்தவர்களில் சி.பி.எம் மண்டல கமிட்டி உறுப்பினர் நித்யநாராயண சாட்டர்ஜியும் உட்படுவார். கடந்த 2001 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நானூர் போலீஸ் குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்திருந்தது. 2002 ஆம் ஆண்டு விசாரணை துவங்கியது.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி 2000 ஆம் ஆண்டில் ரெயில்வே அமைச்சராக பதவியேற்ற பிறகு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரெயில்வேயில் பணிகளை வழங்கியிருந்தார்.
2007 ஆம் ஆண்டு கொல்கத்தா உயர்நீதிமன்றம் இவ்வழக்கின் நடவடிக்கைகளை விரைவாக நடத்த மாவட்ட நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தொண்டரான முக்கிய சாட்சி அப்துல் காலித் உள்ளிட்ட 32 சாட்சிகள் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்திருந்தனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "சுச்சூர் கூட்டுப்படுகொலை:42 மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் குற்றவாளிகள்"
கருத்துரையிடுக