11 நவ., 2010

பீமா பள்ளி துப்பாக்கிச்சூட்டிற்கு அனுமதி வழங்கவில்லை - மாவட்ட ஆட்சியர்

திருவனந்தபுரம்,நவ.11:பீமாப் பள்ளியில் ஆறுபேரின் மரணத்திற்கு காரணமான கேரள போலீசாரின் அநியாய துப்பாக்கிசூட்டிற்கு தான் அனுமதியளிக்கவில்லை என மாவட்ட ஆட்சியரின் கூற்றினால் போலீசின் பொய்க் கதைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மாவட்ட ஆட்சியரின் அனுமதியைப் பெற்றுத்தான் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக போலீசார் விளக்கமளித்திருந்தனர். ஸ்பெஷல் பிராஞ்ச் அறிக்கைகளிலும் இது தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், பீமாப் பள்ளி துப்பாக்கிச்சூட்டைப் பற்றிய விசாரணைக் கமிஷனின் மாவட்ட நீதிபதி கே.ராமகிருஷ்ணனின் முன்பு சமர்ப்பிக்கப்பட்ட சம்பவ விபர அறிக்கையில் போலீசாரின் கூற்றை முற்றிலும் நிராகரித்துள்ளார் மாவட்ட ஆட்சியரான சஞ்சய் கவுர்.

மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர், துணை மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டு உள்ளிட்ட எக்ஸ்க்யூடிவ் மாஜிஸ்ட்ரேட்டுகள் எவரும் துப்பாக்கிச்சூடு நடத்தவோ அல்லது மக்கள் கூட்டத்தின் மீது பலம் பிரயோகிக்கவோ உத்தரவிடவில்லை என மாவட்ட ஆட்சியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2009 மே 14 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை சிட்டி ஸ்பெஷல் ப்ராஞ்ச் அளித்த பாதுகாப்புக் குறித்த அறிக்கையில் இப்பகுதியில் வன்முறை நிகழும் வாய்ப்புள்ளதாக அறிவிக்கவில்லை எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

"பீமாப் பள்ளியில் வன்முறை நிகழ்வதாக பத்திரிகையாளர்கள்தான் தகவலை தெரிவித்தனர். இதனைக் கேள்விபட்டு சம்பவ இடத்திற்கு வந்து இரவில் பீமாப் பள்ளியில் சமரசக் கூட்டமும் நடத்தப்பட்டது.

துப்பாக்கிச்சூடு நடந்த தினத்தில் மாலை 3.37க்கு துணைக் கமிஷனர் விஜயன் பீமாப் பள்ளியில் சிறிய அளவிலான வன்முறை நிகழ்ந்ததாக தகவல் தெரிவித்தார். சில நிமிடங்களுக்காகவே போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண்ணான 2331843 இலிருந்து இதே விபரம் கிடைத்தது.

போலீஸ் பலம் பிரயோகிப்பதற்கான சூழ்நிலை ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கவில்லை. சம்பவ இடத்திற்கு சென்ற பிறகுதான் பீமாப் பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக நான் அறிந்தேன்." இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பீமா பள்ளி துப்பாக்கிச்சூட்டிற்கு அனுமதி வழங்கவில்லை - மாவட்ட ஆட்சியர்"

கருத்துரையிடுக