11 நவ., 2010

சொராஹ்புதீன் போலி என்கவுண்டர் வழக்கில் அமித் ஷாவின் ஜாமீனை ரத்து செய்ய சிபிஐ மனு: பதிலளிக்க ஷாவுக்கு உச்சநீதிமன்றம் அவகாசம்

புதுடெல்லி,நவ.11:சொராஹ்புதீன் போலி என்கவுண்டர் வழக்கில் கைது செய்யப்பட்ட குஜராத் மாநில முன்னாள் அமைச்சர் அமித் ஷாவின் ஜாமீனை ரத்து செய்யக்கோரும் சிபிஐ மனு தொடர்பாக ஷா பதிலளிக்க உச்சநீதிமன்றம் அவகாசம் கொடுத்துள்ளது.

சொராஹ்புதீன் ஷேக் போலி என்கவுன்ட்டர் வழக்கில் சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார் அமித் ஷா. இதையடுத்து அவர் தனது அமைச்சர் பதவியையும் ராஜிநாமா செய்தார். இந்த நிலையில் 100 நாள்கள் கழித்து அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து அமித் ஷாவின் ஜாமீனை ரத்து செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனு மீதான விசாரணை நீதிபதிகள் அப்தாப் ஆலம், ஆர்.எம்.லோதா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக அமித் ஷா பதிலளிக்கவேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அப்போது அமித் ஷா சார்பில் ஆஜரான அவரது வழக்கறிஞர்கள் யு.யு.லலித், பினா மாதவன் ஆகியோர் பதிலளிக்க அவகாசம் கேட்டனர். இதையடுத்து நவம்பர் 29-ம் தேதிக்குள் அமித் ஷா பதிலளிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்தது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சொராஹ்புதீன் போலி என்கவுண்டர் வழக்கில் அமித் ஷாவின் ஜாமீனை ரத்து செய்ய சிபிஐ மனு: பதிலளிக்க ஷாவுக்கு உச்சநீதிமன்றம் அவகாசம்"

கருத்துரையிடுக