21 நவ., 2010

சிறுநீரக நோயை குணப்படுத்தும் மாதுளம் பழச்சாறு

லண்டன்,நவ.21:சிறுநீரக நோய்களைத் தீர்ப்பதற்கு மாதுளம் பழச்சாறு சிறந்தது என ஆய்வில் தெரியவருகிறது,

இதற்காக டயாலிஸிஸ் செய்வதற்கு முன்பாக சில சிறுநீரக நோயாளிகளுக்கு மாதுளம் பழச்சாறு அல்லது புரதச்சத்து அதிகம் உள்ள பிளாஸ்போ பானம் கொடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. மாதுளம் பழச்சாறு சிறுநீரக பாதிப்பையும், பக்கவிளைவான இதய நோயையும், சாவு விகிதத்தையும் குறைப்பது தெரியவந்தது.

ஏனெனில், மாதுளம் பழச்சாறு அருந்தியவர்கள் உடலில் இருந்த தீங்கு விளைவிக்கும் பொருள்களை மாதுளம் பழச்சாறில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் செயல் இழக்கச் செய்ததால் அவர்கள் நோயின் பாதிப்பு மட்டுப்பட்டதாக உணர்ந்தனர். இருப்பினும், இந்த சோதனையை இன்னும் பலரிடம் செய்துபார்ப்பது நல்லது என வெஸ்டன் கலிலி மருத்துவமனையில் இந்த ஆய்வை நடத்திய தலைமை மருத்துவ நிபுணர் பட்யா கிறிஸ்டல் தெரிவித்தார்.

இந்த செய்தியை டெய்லி எக்ஸ்பிரஸ் நாளேடு வெளியிட்டுள்ளது. மாதுளம் பழம் சாப்பிட்டால் ரத்தக்கொதிப்பு, கொழுப்புச்சத்து குறையும், ஆண்மை பெருகும், வெயிலால் ஏற்படும் தோல் சம்பந்தமான நோய்கள் கட்டுக்குள் இருக்கும் என ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளது.

புராஸ்ட்ரேட் புற்று நோயை மாதுளம் பழம் குறைக்கும் என அமெரிக்காவில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்விலிருந்து கண்டறியப்பட்டது நினைவுகூறத்தக்கது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சிறுநீரக நோயை குணப்படுத்தும் மாதுளம் பழச்சாறு"

கருத்துரையிடுக