தோஹா,நவ.14:சர்ச்சைக்கிடமான ஸ்பான்சர்ஷிப் நடைமுறையை மறுபரிசீலனைச் செய்ய கத்தர் உத்தேசித்துள்ளது.
தேசிய மனித உரிமை கமிஷனின் தலைமையகத்தை திறந்து வைத்து உரை நிகழ்த்தும் வேளையில் கத்தர் பிரதமர் ஷேக் ஹமத் பின் ஜாஷிம் பின் ஜாபர் அல்தானி இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:"ஸ்பான்ஷர்ஷிப் நடைமுறையை மிகக் கவனத்தோடு பரிசீலித்து வருகிறோம். புதிய சூழலில் சில சட்ட நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.
கத்தர் நாட்டு குடிமக்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து கத்தருக்கு வேலைக்காக வருபவர்கள் ஆகியோரின் உரிமைகள் ஒரேபோல பாதுகாக்கப்பட வேண்டியதாகும். ஒரேயடியாக இந்த நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவர இயலாது." இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பஹ்ரைன், குவைத் ஆகிய வளைகுடா நாடுகள் ஸ்பான்சர்ஷிப் நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவர தீர்மானித்துள்ளன.
ஸ்பான்சர்ஷிப் நடைமுறையை 'நவீனகால அடிமைத்தனம்' என பஹ்ரைன் நாட்டு தொழில்துறை அமைச்சர் கூறுகிறார்.
ஸ்பான்சர்ஷிப் நடைமுறையின்படி வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஸ்பான்சரின் அனுமதியில்லாமல் நாட்டைவிட்டு செல்லவோ, வேலையை மாற்றிக்கொள்ளவோ இயலாது. உள்நாட்டு மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "கத்தர் ஸ்பான்சர்ஷிப் நடைமுறையை மறு பரிசீலனைச் செய்யும்"
கருத்துரையிடுக