ஐ.நா,நவ.14:சூடான் நாட்டில் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பிரதேசமான தர்ஃபூரில் சீனாவின் வெடிக்குண்டுகள் கைப்பற்றப்பட்டதாக கூறும் அறிக்கையை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஏற்றுக்கொண்டுள்ளது.
தர்ஃபூருக்கான ஆயுத தடையை சீனா மீறியதாக அந்த அறிக்கை குற்றஞ்சாட்டுகிறது. சீனாவின் எதிர்ப்பின் காரணமாக ஒரு வாரம் கழித்துதான் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் இவ்வறிக்கையை ஏற்றுக்கொண்டது. ஆனால், சீனாதான் இதற்கு முழுப் பொறுப்பு என்பதற்கான குற்றச்சாட்டு அவ்வறிக்கையில் இல்லை.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் சூடான் தடை கமிட்டியின் அறிக்கையை உறுப்பு நாடுகளுக்கு அதிகாரப்பூர்வமாக வழங்குவதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தலைவரான பிரிட்டனின் தூதர் மார்க் எல்யால் கிராண்டிடம் வல்லுநர்கள் குழுவின் அறிக்கை ஒப்படைக்கப்பட்டது. சீனாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் தர்ஃபூரில் கண்டறியப்பட்டதற்கான உளவறிக்கைகள் அறிக்கையில் ஆவணங்களாக கொடுக்கப்பட்டுள்ளன.
சூடானிற்கு ஆயுதங்களை விற்பதற்கு சீனாவிற்கு உரிமை உண்டு என்றபொழுதிலும், தர்ஃபூருக்கு ஆயுதங்கள் செல்லாமலிருப்பதற்கான பொறுப்பு அவர்களுக்கு உண்டு. அரசு ராணுவம் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்குமிடையே மோதல் நடைபெறும் இடம்தான் தர்ஃபூர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "தர்ஃபூர் ஆயுத அறிக்கையில் சீனாவுக்கெதிராக விமர்சனம்"
கருத்துரையிடுக