பாக்தாத்,நவ.14:ஈராக்கில் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கிய அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் முறிந்துவிட்டதாக சுன்னி பிரிவைச் சார்ந்த முன்னாள் பிரதமரான இயாத் அல்லாவி தெரிவித்துள்ளார். வருகிற நாட்களில் தாக்குதல்களும், அராஜகமும் நிறைந்திருக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்தில் இறுதியாக இணைந்த கட்சிதான் அல்லாவியின் அல் ஈராக்கியா கட்சி. ஆனால், ஒப்பந்தம் மீறப்பட்டதாக குற்றஞ்சாட்டி கட்சியின் மூன்றில் இருபகுதி எம்.பிக்களும் பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்திலேயே வெளிநடப்புச் செய்தனர்.
அரசில் சேருவதற்கு விருப்பமில்லாததால் இவர்கள் எதிர்கட்சி வரிசையில் அமர்வர். தமது கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆட்சியில் பங்கேற்பர் எனக்கூறிய அல்லாவி, தான் உள்ளிட்ட முக்கிய நபர்கள் விலகியிருப்போம் என தெரிவித்தார். ஒப்பந்தம் முறிந்துவிட்டதாக சி.என்.என் செய்திக்கு அளித்த பேட்டியில் அல்லாவி தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஈராக்:ஒப்பந்தம் முறிந்ததாக அல்லாவி"
கருத்துரையிடுக