8 நவ., 2010

இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் தலையிடமாட்டோம் - ஒபாமா

மும்பை,நவ.8:இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான பிரச்சனையை தீர்ப்பதற்கு அமெரிக்கா மத்தியஸ்தம் வகிக்காது என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

மூன்று தினங்கள் கொண்ட சுற்றுப் பயணத்திற்காக இந்தியாவுக்கு வருகைத்தந்துள்ள அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, மும்பை புனித சேவியர் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடும் பொழுது இதனை தெரிவித்தார்.

மாணவர் ஒருவர் இதுக்குறித்து கேள்வி எழுப்பியபொழுது பதிலளித்த ஒபாமா கூறியதாவது: "முதலில் சிறிய விஷயங்களைக் குறித்து பேச்சுவார்த்தையை துவக்கவேண்டும். பின்னர் சிக்கலான பெரிய விஷயங்களைக் குறித்து(கஷ்மீர்) பேச்சுவார்த்தைகளை நடத்தவேண்டும்.

காலச்சூழலைக் கணக்கில்கொண்டு இந்தியா-பாகிஸ்தானிடையே பரஸ்பரம் நம்பிக்கை பிறக்குமென நான் நம்புகிறேன். பாகிஸ்தானில் சமாதானம், ஸ்திரத்தன்மை, செழிப்பு உருவாகவேண்டும் என்பது இந்தியாவின் விருப்பமாகும்.

தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் நாங்கள் எதிர்பார்த்தது போல வேகமான நடவடிக்கைகள் பாகிஸ்தானில் இல்லை. பாகிஸ்தானை முழுவதும் விழுங்கும் ஆற்றல்கொண்ட தீவிரவாதம் என்ற நோயை துடைத்தெறிய இஸ்லாமாபாத்துடன் நாங்கள் ஒத்துழைக்கிறோம்.

தாலிபான், அல்காயிதா, லஷ்கர்-இ-தய்யிபா போன்றவற்றின் பிரிவுகள் அங்குள்ளன. மும்பையிலும், நியூயார்க்கிலும் நடந்ததுபோன்ற தாக்குதல்களின் பின்னணியில் செயல்பட்டவர்களுக்கு எதிராக ராணுவரீதியிலான பதிலடிதான் தேவை.

இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து செயல்பாட்டால் வளர்ச்சி உருவாகும். இது உடனடியாக நிகழாவிட்டாலும் கூட இதுதான் முடிவற்ற லட்சியமாகும். சமாதானமான ஆஃப்கான் என்ற லட்சியத்தை அடைந்தால்தான் அங்கிருந்து ராணுவத்தை முற்றிலும் விலக்கிக்கொள்ள முடியும்."

பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்காததன் காரணம் என்ன? என்ற ஒரு மாணவியின் கேள்விக்கு பதிலளிக்கையில்தான் ஒபாமா இதனை தெரிவித்தார். மாணவர்களுடனான ஒபாமாவின் கலந்துரையாடல் ஒரு மணிநேரம் நீடித்தது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் தலையிடமாட்டோம் - ஒபாமா"

கருத்துரையிடுக