5 நவ., 2010

அஜ்மீர் குண்டுவெடிப்பு:தொடரும் பாசிஸ்டுகளின் கைதுகள், ஹர்ஷத் கைது செய்யப்பட்டது சாதனை என ராஜஸ்தான் உள்துறை அமைச்சர்

ஜெய்பூர்,நவ.5: 2007 ஆம் ஆண்டு அஜ்மீர் தர்காவில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் ஒரு குற்றவாளியை ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்புப் படையினர் கைதுச் செய்துள்ளனர்.

பசுவதைக்கெதிராக பணியாற்றிய முகேஷ் வஸனி(வயது 42) என்பவர்தான் கைதுச் செய்யப்பட்ட ஹிந்துத்துவா தீவிரவாதியாவார். இவர் கோத்ராவில் கைதுச் செய்யப்பட்டார். நீதிமன்றம் இவரை வருகிற செவ்வாய்க்கிழமை வரை காவலில் வைக்க உத்தரவிட்டது.

அஜ்மீர் வழக்கில் இது ஐந்தாவது கைதாகும். நேற்று முன்தினம் இவ்வழக்கில் முக்கிய சூத்திரதாரியான ஹர்ஷ சோலங்கியை ஏ.டி.எஸ் வதோதராவில் வைத்து கைதுச் செய்திருந்தது.

வஸனி கட்டிட ஒப்பந்தக்காரராவார். ஹர்ஷத்திடம் விசாரணை நடத்தும் வேளையில்தான் வஸனிக்கும் பங்குள்ளது தெரியவந்தது.அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் நேற்று முன்தினம் ஹர்ஷத் சோலங்கி கைதுச் செய்யப்பட்டது சாதனை என ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் சாந்தி தரிவால் குறிப்பிட்டார்.

"ராஜஸ்தான் தீவிரவாத எதிர்ப்பு படையை அவர் பாராட்டினார். குஜராத் பெஸ்ட் பேக்கரி வழக்கிலும், அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கிலும் முக்கிய குற்றவாளியான ஹர்ஷத் சோலங்கியை எவருடைய ஒத்துழைப்பும் இல்லாமல் ஏ.டி.எஸ் கைதுச் செய்ததில் மிக்க மகிழ்ச்சியாகும். இவர் தலைமறைவாக இருந்துவந்தார்.

சி.பி.ஐக்கோ இதர மாநில புலனாய்வு ஏஜன்சிகளுக்கோ ஹர்ஷத் சோலங்கியை கைதுச் செய்ய இயலவில்லை. ஆனால், எங்களின் ஏ.டி.எஸ் இதனை சாதித்துள்ளது. குண்டுவெடிப்பு வழக்கில் வீழ்ச்சிகள் ஏற்படாமல் விசாரணையை நடத்திவருகிறது ராஜஸ்தான் ஏ.டி.எஸ். அண்டை மாநிலமான மத்திய பிரதேசில் ஏ.டி.எஸ் விசாரணைக்கு ஒத்துழைத்தது. ஆனால், அம்மாநில அரசு ஒத்துழைக்கவில்லை." இவ்வாறு சாந்தி தரிவால் கூறினார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அஜ்மீர் குண்டுவெடிப்பு:தொடரும் பாசிஸ்டுகளின் கைதுகள், ஹர்ஷத் கைது செய்யப்பட்டது சாதனை என ராஜஸ்தான் உள்துறை அமைச்சர்"

கருத்துரையிடுக