5 நவ., 2010

ஷபீர்ஷாவை தாக்கிய பாசிஸ்டுகள்

ஜம்மு.நவ.5:கஷ்மீர் போராட்டத்தில் முன்னணி தலைவரும் டெமோக்ரேடிக் ஃப்ரீடம் கட்சியின் தலைவருமான ஷபீர் ஷாவை பாசிச அமைப்பான யுவமோர்ச்சா குண்டர்கள் தாக்கியுள்ளனர்.

ரெசிடன்ஸி சாலையில் அமைந்துள்ள ப்ரீமியர் ஹோட்டலில் வைத்து பத்திரிகையாளர்கள் சந்திப்பை ஷபீர் ஷா நடத்திக்கொண்டிருக்கும் வேளையில் அங்கு அத்துமீறி நுழைந்த பத்துக்கும் மேற்பட்ட யுவமோர்ச்சா குண்டர்கள் ஷபீர் ஷாவை தாக்க ஆரம்பித்தனர்.

ஷாவை பாதுகாக்க அவரது ஆதரவாளர்கள் முயன்றபொழுது அவர்களுக்கும் யுவமோர்ச்சா குண்டர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது.

தாக்குதலில் ஷாவின் கண்ணாடி உடைந்தது. யுவமோர்ச்சா குண்டர்கள் ஷாவின் அறையிலிருந்த ஃபர்னிச்சர்கள், மைக்ரோ ஃபோன்கள் ஆகியவற்றை சேதப்படுத்தினர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து போலீஸ் 3 பேரைக் கைதுச் செய்துள்ளது. அக்கிரமக்காரர்கள் அவ்விடத்தை காலிச் செய்தபிறகு ஷா பத்திரிகையாளர்கள் சந்திப்பை தொடர்ந்தார்.

கடந்த ஒன்பது மாத சிறைக்குப் பிறகு வெளியே வந்த ஷபீர் ஷா பத்திரிகையாளர்களை சந்திக்கும் வேளையில்தான், ஜம்முவின் மண்ணை தேசவிரோத உணர்வை வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்தக் கூடாது என கோஷமிட்டு யுவமோர்ச்சா குண்டர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இத்தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த ஷபீர் ஷா, இத்தாக்குதல் துரதிர்ஷ்டவசமானது எனவும், இளைஞர்களை சிலர் தங்களுக்கெதிராக உணர்ச்சியைத் தூண்டி விடுகின்றனர் எனக் குற்றஞ்சாட்டினார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஷபீர்ஷாவை தாக்கிய பாசிஸ்டுகள்"

கருத்துரையிடுக