5 நவ., 2010

தகியுத்தீன் வாஹித் கொலை வழக்கு: நிழலுக தாதா வியட்நாமில் கைது

மும்பை,நவ.5:ஈஸ்ட் வெஸ்ட் ஏர்லைன்சின் மேலாண்மை இயக்குநராக பணியாற்றிய தகியுத்தீன் வாகித்தை கொலைச் செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பண்டி பாண்டே வியட்நாமில் வைத்து கைதுச் செய்யப்பட்டார்.

பத்துக்கும் மேற்பட்ட கொலை வழக்குகளில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவரும், தலைமறைவாக இந்திய அரசுக்கு தண்ணிக்காட்டி வந்த பாண்டேவுக்கு எதிராக இந்திய அரசு ரெட்கார்னர் நோட்டீஸ் வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து வியட்நாம் நாட்டின் ஹனோவில் வைத்து சர்வதேச போலீசான இண்டர்போல் பாண்டேவைக் கைதுச் செய்தது. இவர் உடனடியாக இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார்.

தகியுத்தீன் வாகித், கஸ்டம்ஸ் கிளியரிங் ஏஜண்ட் ராஜு பிள்ளை, கார்ப்பரேட்டர் தேவிதாஸ் சவ்குளா ஆகியோரைக் கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளியான பாண்டே முன்பு சோட்டாராஜன் கும்பலின் முக்கிய நபராவார்.

பாலிவுட், தொழில் துறைகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய பண்டி பாண்டே பிறரை மிரட்டி பணம் பறிப்பதில் கைத்தேர்ந்தவராவார்.

90 களில் பாங்காக்கில் வைத்து சோட்டாராஜன் தாக்குதலுக்குள்ளான பொழுது அவரை காப்பாற்றியவர் பண்டி பாண்டேயாவார். 2000 ஆம் ஆண்டில் சோட்டாராஜனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் பிரிந்த பாண்டே பின்னர் தனக்கென தனியாக கும்பலை உருவாக்கி தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் வசித்து வந்தார்.

கடந்த 1995 ஆம் ஆண்டு சோட்டாராஜனுக்காக தனியார் விமான நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரான தகியுத்தீன் வாகித்தை கொலைச் செய்தார் பாண்டே. அன்று பந்திராவில் ஈஸ்ட் வெஸ்ட் ஏர்லைன்ஸின் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வாகித்தை ஆறுபேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து பாண்டே மும்பை நிழலுக தாதாவாக மாறினார். உத்தரகாண்டில் ஹல்துவானியைச் சார்ந்தவர்தான் பண்டி பாண்டே என அழைக்கப்படும் பிரகாஷ் நாராயணன் பாண்டே.

மும்பை போலீஸ் மட்டுமல்லாமல் உ.பி மாநில சிறப்பு படையினரால் தேடப்படுபவர்தான் பண்டி பாண்டே.

செய்தி:மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "தகியுத்தீன் வாஹித் கொலை வழக்கு: நிழலுக தாதா வியட்நாமில் கைது"

கருத்துரையிடுக