புதுடெல்லி,நவ.4:மனித உரிமை ஆர்வலரான நண்பருடன் கஷ்மீருக்கு செல்வதற்காக டெல்லி வந்த அமெரிக்காவின் பிரபல பேராசிரியர் டெல்லி விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பிவைக்கப்பட்டார்.
பாஸ்போர்ட்டில் எண்ட்ரி சீல் வைத்தபிறகு, உடனிருந்த நண்பர் மனித உரிமை ஆர்வலர் என்பதை அறிந்துக் கொண்ட விமானநிலைய அதிகாரிகள் அவருடைய எண்ட்ரீயை கேன்சல் செய்து திருப்பி அனுப்பிவிட்டனர்.
கலிஃபோர்னியா இன்ஸ்ட்யூட் ஆஃப் இண்டிகரல் ஸ்டடீஸின் சோசியல் அண்ட் கல்சுரல் ஆந்த்ரோபாலஜி டிபார்ட்மெண்ட்டின் தலைவரும் அசோசியேட் பேராசிரியருமான ரிச்சார்டு ஷாபிரோ என்பவர்தான் விமானநிலையத்திலிருந்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டவராவார்.
உடனிருந்த இந்தியாவைச் சார்ந்த மனித உரிமை ஆர்வலரான அங்கனா சட்டர்ஜிக்கு இந்தியாவிற்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டது.
இண்டர்நேசனல் பீப்பிள்ஸ் ட்ரிப்யூனல் ஆன் ஹியூமன்ரைட்ஸ் அண்ட் ஜஸ்டிஸின் கோ-கன்வீனர் அங்கனா சாட்டர்ஜி என்ற பெண்மணியுடன் நவம்பர் ஒன்றாம் தேதி அதிகாலை 5.30க்கு பேராசிரியர் ரிச்சார்டு ஷாபிரோ அமெரிக்காவின் சான்ஃப்ரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி விமானநிலையத்தில் வந்திறங்கினார்.
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமைப் பெற்றுள்ள அங்கனா சட்டர்ஜி கஷ்மீரில் பிரபல மனித உரிமை அமைப்பான ஜம்முகஷ்மீர் கோஎலிசன் ஃபார் சிவில் சொசைட்டியுடன் இணைந்து கஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்களைக் குறித்து ஆய்வு நடத்திவருகிறார்.
எமிக்ரேசன் அதிகாரி முதலில் ரிச்சார்டு ஷாபிராவின் பாஸ்போர்ட்டில் எண்ட்ரீ சீல் பதித்தபொழுதும், பின்னர் அவர் வருகைத் தந்தது அங்கனா சட்டர்ஜியுடன் என்பதை புரிந்துக் கொண்டார்.
அங்கனா கஷ்மீரில் பணியாற்றும் மனித உரிமை ஆர்வலர் என்பதையும் தெரிந்துக்கொணடதைத் தொடர்ந்து எவ்வித விசாரணையுமின்றி ரிச்சார்டு ஷாபிராவின் எண்ட்ரீயை கேன்சல் செய்துவிட்டார்.
ஆனால் விசாவை ரத்துச் செய்யவில்லை. உடனடியாக நாட்டைவிட்டு வெளியறவும் உத்தரவிட்டார் அந்த அதிகாரி. தொடர்ந்து காலை 11.30க்கு அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றார் ரிச்சார்டு ஷாபிரோ.
ஏற்கனவே பல தடவை கஷ்மீருக்கு சென்றுள்ள ஷாபிரோ அங்குள்ள மனித உரிமை ஆர்வலர்களுடன் தொடர்பு வைத்திருந்தவராவார். அங்கனா சட்டர்ஜி இந்தியப் பிரஜையாகையால் அவரை அதிகாரிகள் தடுக்கவில்லை.
2008 முதல் சாட்டர்ஜி உள்பட மனித உரிமை ஆர்வலர்கள் இணைந்து கஷ்மீரில் இண்டர்நேசனல் பீப்பிள்ஸ் ட்ரிப்யூனலை ஆரம்பித்த பிறகு சாட்டர்ஜி இந்தியாவின் விமானநிலையங்களில் சிறப்பு பரிசோதனைக்கும், விசாரணைக்கும் ஆளாகிவருகிறார்.
2006 முதல் அவர் கஷ்மீரில் மனித உரிமை ஆர்வலர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். கஷ்மீரைக் குறித்து இவர் சில கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "கஷ்மீருக்கு வருகைபுரிந்த அமெரிக்க பேராசிரியர் திருப்பி அனுப்பப்பட்டார்"
கருத்துரையிடுக