4 நவ., 2010

முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் அமெரிக்க நிறுவனத்தின் சர்வே

திருவனந்தபுரம்,நவ.4:கேரள மாநில தலைநகரமான திருவனந்தபுரத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளை மையமாக்கொண்டு அமெரிக்க நிறுவனம் நடத்திய சர்வேயில் மர்மம் நீடிக்கிறது.

கடந்த மாதம் இரண்டாம் தேதி நகரத்தின் கரிமடம் காலனியை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட சர்வேயில் முஸ்லிம்களை மட்டுமே உட்படுத்திய கேள்விகளே அடங்கியிருந்தன.

இந்தியாவுடனான முஸ்லிம்களின் பற்றினைக் குறித்தும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான முஸ்லிம்களின் நிலைப்பாட்டைக் குறித்தும் கேள்விகள் அடங்கியிருந்தன.

இச்சம்பவத்தைக் குறித்து விசாரித்த மாநில உளவுத்துறையினர் சர்வேயைக் குறித்து மத்திய உளவுத்துறை ஏஜன்சிகள் விசாரிக்க சிபாரிசுச் செய்துள்ளனர்.

இந்திய பிரதமர், மத்திய அரசு, இந்திய ராணுவம் ஆகிவற்றிற்கான முஸ்லிம்களின் மனோநிலை என்பதுக் குறித்த கேள்விகளுடன் சர்வே துவங்குகிறது.

தேசிய அவைகளுக்கான தேர்தல் முஸ்லிம்களின் கலாச்சாரத்திற்கு விரோதமானது என்ற கருத்தினைக் குறித்த நிலைப்பாடு, தேர்தல் பங்கேற்பதுக் குறித்த அபிப்ராயம், ஒரு முஸ்லிம் தேசத்திற்கு மிகவும் உகந்த சட்டமியற்றும் சபை என தொடர்கிறது கேள்விகள்.

மேற்கத்திய பொருளாதா, வர்த்தக கொள்கைகளுடனான நிலைப்பாடு, அமெரிக்காவோடு, இஸ்ரேலினோடும் முஸ்லிம்களின் நிலைப்பாடுக் குறித்த கேள்விகள் முஸ்லிம்களிடம் மட்டுமே கேட்கப்பட்ட கேள்விகளில் அடங்குகின்றன.

ஷரீஅத்தைக் குறித்து என்ன புரிந்துள்ளீர்கள்? ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ், அஹ்மதி நஜாத், அய்மன் அல்ஜவாஹிரி, உஸாமா பின் லேடன், அல்காயிதா, ஜமாஅத்தே இஸ்லாமி, லஷ்கர்-இ-தய்யிபா ஆகியவற்றிற்கு ஆதரவா? எதிர்ப்பா? ஆகிய கேள்விகளும், சர்வேயில் பங்கேற்கும் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப், ஸ்கார்ப் ஆகியவற்றை அணிவதுண்டா? போன்ற முஸ்லிம் பெண்களை மையமாகக் கொண்ட கேள்விகளும், சர்வேயில் பங்கெடுப்போரின் அரசியல் நிலைப்பாட்டினைக் குறித்து அறியும் வகையிலான கேள்விகளும் இந்த சர்வேயில் அடங்கியிருந்தன.

அமெரிக்க ஏஜன்சியான ப்ரின்ஸ்டன் சர்வே ஆஃப் அசோசியேட் இண்டர்நேசன்லுக்காக டி.என்.எஸ் இந்தியா என்ற மார்கெடிங் ஏஜன்சிதான் இந்த சர்வேயை நடத்தியுள்ளது. இவர்களின் சர்வேயில் கேட்கப்பட்ட கேள்விகளில் சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஊர்வாசிகள் புகார் அளித்தைத் தொடர்ந்து போலீஸ் இவர்களை கஸ்டடியில் எடுத்துள்ளது.

மதப்பிரிவினை ஏற்படுத்துவது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்திவருகிறது திருவனந்தபுரம் கோட்டை போலீஸ்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் அமெரிக்க நிறுவனத்தின் சர்வே"

கருத்துரையிடுக