14 நவ., 2010

விமானநிலையம் மற்றும் நேட்டோ மையத்தின் மீது தாக்குதல்

காபூல்,நவ.14:கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஜலாலாபாத்தில் முக்கிய விமானநிலையத்தின் மீதும், நேட்டோ மையத்தின் மீதும் வலுவான தாக்குதலை நடத்தியுள்ளனர் தாலிபான் போராளிகள்.

14 பேர் இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், இத்தாக்குதலில் 30 அந்நிய ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் தாலிபானின் செய்தித் தொடர்பாளர் சபீஉல்லாஹ் முஜாஹித் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், உடலில் வெடிக்குண்டைக் கட்டி வந்த 8 பேர்தான் இத்தாக்குதலை நடத்தியதாக ராணுவம் கூறியுள்ளது.

விமானநிலையத்திலிருந்து புகையும், குண்டுச் சத்தமும் வெளியானதாக நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர். தாக்குதல் நடத்திய 6 பேரை கொன்றதாக நேட்டோ செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.

நேட்டோ மற்றும் தாலிபானின் அறிவிப்பைக் குறித்து சுதந்திரமான அறிவிப்புகள் வெளியாகவில்லை. விமானநிலையத்தில் பல மணிநேரம் நீண்ட மோதல்கள் நடைப்பெற்றுள்ளன.ஆப்கான் ராணுவத்தினரின் வேடத்தில் போராளிகள் தாக்குதல் நடத்த வந்துள்ளனர்.

நங்கர்ஹார் மாகாணத்தில் தாலிபான் போராளிகள் மற்றும் ராணுவத்தினருக்கிடையே பல மணிநேரம் நீண்ட மோதல் நடைப்பெற்றுள்ளது. இதில் 3 போராளிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே குண்டூசில் மோட்டார் சைக்கிளில் இணைக்கப்பட்டிருந்த குண்டுவெடித்து 10 சிவிலியன்களும், இரண்டு போலீசாரும் கொல்லப்பட்டனர். வெள்ளிக்கிழமை காபூலில் ஆக்கிரமிப்பு ராணுவத்தினரின் வாகனங்களை குறிவைத்து போராளிகள் கார் குண்டுத்தாக்குதல் நடத்தியிருந்தனர். இச்சம்பவத்தில் இரண்டு அந்நிய ராணுவத்தினர் காயமடைந்தனர்.

கடந்த மூன்று மாதங்களுக்கிடையே முதல் முறையாக ஆப்கான் தலைநகரில் இம்மாதிரியான தாக்குதல் நடைப்பெற்றுள்ளது. தாலிபானின் சக்தி பலவீனப்பட்டதாக கூறும் நேட்டோவின் கூற்றை பொய்யாக்கும் விதமாக இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானில் தாலிபானின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு ஒன்பதாவது ஆண்டு நினைவு தினத்தில் இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "விமானநிலையம் மற்றும் நேட்டோ மையத்தின் மீது தாக்குதல்"

கருத்துரையிடுக