6 நவ., 2010

அமைச்சர்களிடம் அடையாள அட்டைக் கோரிய சம்பவம்: ஒபாமா நிகழ்ச்சியை புறக்கணிக்கப் போவதாக மிரட்டல்

மும்பை,நவ.6:அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிற்கான பாதுகாப்பு கட்டமைப்பை அமெரிக்க பாதுகாப்பு ஏஜன்சிகளின் கைவசம் வந்தபொழுது மஹாராஷ்ட்ரா மாநில அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தங்களது பிறந்த தேதி முதல் பான் அட்டை விபரம் வரை தெரிவிக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

மஹாராஷ்ட்ரா மாநில அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் மும்பையில் அமெரிக்க தூதரகம் அளித்துள்ள தனி விண்ணப்ப படிவத்தில் பிறந்ததேதி, இரத்தப்பிரிவு, வகிக்கும் பதவி, முகவரி, புகைப்படம் உள்ளிட்ட விபரங்களை அளிக்க கோரப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள அளிக்கப்பட்ட அழைப்பிதழுடன் அம்மாநில முதல்வர் அசோக் சவான் உள்ளிட்டவர்களுக்கு ஏராளமான கேள்விகள் அடங்கிய விண்ணப்ப படிவத்தையும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.

இது விவாதத்தைக் கிளப்பியவுடன், அதிகாரிகளிடம் ஏற்பட்ட தவறு எனக்கூறி அமெரிக்க தூதரக தலைதப்பினால் போதும் என்ற நிலையில் உள்ளது.

ஆனால், ஒபாமா கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்பதுக் குறித்து பெரும்பாலான அமைச்சர்கள் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆட்சியில் அமர்ந்துள்ளவர்களின் விபரங்களைக்கூட அறியும் வகையில் விரிவான கேள்விகளைக் கொண்ட விண்ணப்படிவம் அழைப்பிதழுடன் அளிக்கப்பட்டது என தலைமைச் செயலகத்தில் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

"எங்களிடம் எங்களைப் பற்றிய விபரங்களை விசாரித்தனர் அமெரிக்க தூதரக அதிகாரிகள். யார் விருந்தாளி என்பதைக் குறித்து தெரியவில்லை என்றால் எதற்கு எங்களை அழைக்கவேண்டும் என மஹாராஷ்ட்ரா மாநில துணை முதல்வர் புஜ்பால் கேள்வி எழுப்பியுள்ளார். வருத்தம் தெரிவித்து தூதரக துணைத்தூதர் தன்னை சந்தித்த பொழுதிலும் நிகழ்ச்சியில் பங்கேற்பதுக் குறித்து இறுதி முடிவெடுக்கப்படவில்லை" என புஜ்பால் தெரிவித்துள்ளார்.

முதல்வரும், மற்றுமுள்ளவர்களும் என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்பதை எதிர்பார்த்திருப்பதாக புஜ்பால் தெரிவித்துள்ளார்.

அசோக் சவானும், உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீலும் தீபாவளிக் கொண்டாட்டத்திற்காக சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு ஏற்பட்ட அபத்தம் இது எனவும், முதல்வரையும், துணை முதல்வரையும் நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்ததாகவும் அமெரிக்க துணைத்தூதர் பால் ஃபோம்ஸ்பீ தெரிவித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அமைச்சர்களிடம் அடையாள அட்டைக் கோரிய சம்பவம்: ஒபாமா நிகழ்ச்சியை புறக்கணிக்கப் போவதாக மிரட்டல்"

கருத்துரையிடுக