காபூல்,நவ.18:ஆப்கான் அரசுடன் எவ்வித சமாதான பேச்சுவார்த்தையும் நடைப்பெறவில்லை என தாலிபான் தலைவர் முல்லா உமர் தெரிவித்துள்ளார்.
தாலிபான்களுடன் ஆப்கன் அரசு சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்ற செய்திகளைத் தொடர்ந்துதான் இவ்வறிக்கையை முல்லா உமர் வெளியிட்டுள்ளார்.
ஆப்கானிலுள்ள ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட அந்நிய ஆக்கிரமிப்பு படையினர் நாட்டைவிட்டு வெளியேறும் வரை ஆப்கானிஸ்தான் அரசுடன் எவ்வித பேச்சுவார்த்தைகளுக்கும் தயாரில்லை என முல்லா உமர் தெரிவித்துள்ளார்.
சூத்திரதாரிகளான ஆப்கானின் எதிரிகள் ஒரு புறம் ராணுவத் தாக்குதலை வலுப்படுத்திவிட்டு மறுபுறம் பேச்சுவார்த்தை என்ற வதந்தியை பரப்பிவருகின்றனர் என முல்லா உமர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
போர்ச்சுகல் தலைநகரான லிஸ்பனில் நேட்டோவின் தலைமை மாநாடு நடைபெறுவதற்கு நான்கு தினங்கள் மீதமிருக்கும் வேளையில்தான் முல்லா உமரின் இவ்வறிக்கை வெளியாகியுள்ளது. லிஸ்பன் உச்சிமாநாட்டில் ஆப்கானிஸ்தான் முக்கிய விவாத கருப்பொருளாக இருக்கும்.
தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை துவங்கிவிட்டதாகவும், முழுமையான அமைதியை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் ஆப்கான் அதிபர் ஹமீத் கர்ஸாயி தெரிவித்துள்ளார்.
ஆனால், இவ்விவகாரத்தில் ஆரம்ப நடவடிக்கைகள்தான் துவங்கியுள்ளதாக ஆப்கன், அமெரிக்க உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
2014 ஆம் ஆண்டில் ஆப்கானின் பாதுகாப்பை முழுமையாக ஆப்கான் ராணுவத்தினரிடம் ஒப்படைக்கும் நோக்கத்தோடு கர்ஸாயி நடைமுறைப்படுத்த திட்டமிட்டிருக்கும் பேச்சுவார்த்தை திட்டம் குறித்து லிஸ்பன் உச்சிமாநாடு விவாதிக்கும்.
கடுமையான பதிலடி கிடைத்துக் கொண்டிருக்கும் சூழலில் ஆப்கானின் போர்தந்திரம் குறித்து அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மறுபரிசீலனைச் செய்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த ஆண்டு ஜூலை மாதம் முதல் அமெரிக்க ராணுவம் ஆப்கானிலிருந்து வெளியேறத் துவங்கும் என ஒபாமா கூறியுள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "சமாதானப் பேச்சுவார்த்தை நடைப்பெறவில்லை - முல்லா உமர்"
கருத்துரையிடுக