18 நவ., 2010

சீனாவில் கட்டிடத்தில் தீ:53 பேர் மரணம்

பீஜிங்,நவ.18:சீனாவின் ஷாங்காயில் 28 மாடி கட்டிடம் ஒன்றில் தீப்பற்றிக் கொண்டதில் 53 பேர் மரணமடைந்தனர். சமீபத்தில் இக்கட்டிடம் புதுப்பிக்கப்பட்டிருந்தது. உரிமம் பெறாத வெல்டர்கள்தான் இவ்விபத்துக் காரணம் என ஆரம்ப அறிக்கைகள் கூறுகின்றன.

தீப்பிடித்த கட்டிடத்தில் தங்கியிருந்தவர்கள் ஆசிரியர்களாவர். இச்சம்பவம் தொடர்பாக 4 பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். தீயணைப்பு படையினர் பல மணிநேரங்கள் போராடி தீயை அணைத்தனர்.

சீனாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஷாங்காய்க்கு வருகைத் தந்து தீயணைப்பு மீட்புப்பணிக்கு தலைமை வகித்தார். குவித்துப் போட்டிருந்த கட்டிட நிர்மாணப் பொருட்களிலிருந்து தீ பரவ ஆரம்பித்தது என்றும், மூங்கிலால் நிர்மாணிக்கப்பட்டிருந்த பலகைத் தட்டில் தீப்பற்றி கட்டிடம் முழுவதையும் தீ விழுங்கியது என நேரில் கண்ட சாட்சிகள் கூறுகின்றனர்.

காணாமல் போனவர்கள் குறித்து தகவல்களை சேகரிக்க அவர் உள்ளூர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 150 குடும்பங்கள் இந்த ப்ளாக்கில் வசித்து வந்துள்ளனர். நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் காப்பாற்றப்பட்டனர். 90 பேர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமானதாகும். மரண எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சீனாவின் வர்த்தக நகரமான ஷாங்காயில் 20 லட்சம் பேர் வசிக்கின்றனர். சமீபகாலமாக பெரிய அளவிலான நிர்மாணப் பணிகள் இங்கு நடந்து வருகின்றன.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சீனாவில் கட்டிடத்தில் தீ:53 பேர் மரணம்"

கருத்துரையிடுக