18 நவ., 2010

இஸ்ரேலுக்கெதிரான சினிமா துருக்கியில் தயாராகிறது

அங்காரா,நவ.18:காஸ்ஸாவில் துயரத்தில் ஆழ்ந்துள்ள ஃபலஸ்தீன் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக இஸ்ரேலின் தடையை மீறிச்சென்ற துருக்கி கப்பலான ஃப்ளோட்டில்லா மீது இஸ்ரேல் நடத்திய அநியாயமான தாக்குதலை அடிப்படையாகக் கொண்டு துருக்கியில் திரைப்படம் ஒன்று தயாராகி வருகிறது.

இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 28 ஆம் தேதி வெளியாகிறது. இது ஒரு ஆக்‌ஷன் திரைப்படமாகும்.

இத்திரைப்படத்திற்கு 'ஃபலஸ்தீன்-ஓநாய்களின் பள்ளத்தாக்கு' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இஸ்ரேல் எதிர்ப்பு தொலைக்காட்சி தொடரான 'ஓநாய்களின் பள்ளத்தாக்கு' துருக்கியில் பிரசித்திப் பெற்றதாகும்.

ஜேம்ஸ் பாண்ட், ராம்போ போன்ற கதாபாத்திரங்களின் முன்மாதிரியில் துருக்கியில் எதிரிகளை வேட்டையாடும் திரைப்படம்தான் 'ஓநாய்களின் பள்ளத்தாக்கு'.

ஒன்பது துருக்கி நாட்டவர்களைக் கொலைச்செய்த ஃப்ளோட்டில்லா தாக்குதலுக்கு உத்தரவிட்ட இஸ்ரேலிய கமாண்டர் கொலைச் செய்யப்படும் விதமாக காட்சி அமைக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் கதாநாயகன் போலட் அலம்தார் ஆவார்.

கடந்த ஆண்டு இஸ்ரேல்-துருக்கிக்கு இடையில் ஏற்பட்ட தூதரக ரீதியிலான கலகத்தை அடிப்படையாகக் கொண்டு 'இடைவெளி' என்ற தொடர் தயாரிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து வெளிவரவிருக்கும் 'ஃபலஸ்தீன் - ஓநாய்களின் பள்ளத்தாக்கு' என்ற திரைப்படம் இரு நாடுகளுக்கிடையே சமரச முயற்சியை கையாண்டுவரும் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு பலத்த அடியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இஸ்ரேலுக்கெதிரான சினிமா துருக்கியில் தயாராகிறது"

கருத்துரையிடுக