25 நவ., 2010

உளவு:போலீஸ் காவலில் உள்துறை அமைச்சக இயக்குநர்

புதுடெல்லி,நவ.25:கைதுச் செய்யப்பட்ட மத்திய உள்துறை அமைச்சக இயக்குநரும் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான ரவி இந்தர் சிங்கை ஆறு தினங்களுக்கு போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

சொந்த விருப்பங்களுக்காக ரகசிய விபரங்களை இவர் கசியவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைதுச் செய்யப்பட்டிருந்தார். சிங்கிற்காக இடைத் தரகராக செயல்பட்ட கொல்கத்தாவை சேர்ந்த வர்த்தகர் வினீத் குமாரையும் போலீஸ் காவலில் வைக்க சிறப்பு நீதிபதி சங்கீதா உத்தரவிட்டார்.

1994 பாட்ச் ஆஃபீஸரான இந்திர சிங்கிற்கு எதிரான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன என்று போலீஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இவருடைய 12000 தொலைபேசி அழைப்புகளை கைப்பற்றியுள்ளதாகவும், போலி அடையாள அட்டைகளை பயன்படுத்தி 3 மொபைல் இணைப்புகளை இவர் பெற்றுள்ளார் எனவும் போலீஸ் தெரிவிக்கிறது.

அதிகாரப்பூர்வ இருப்பிட வசதியை புறக்கணித்துவிட்டு கிரேட்டர் கைலாஷில் விருந்தினர் மாளிகையில் சிங் தங்கியிருந்தார். இதற்கு வாடகையான ரூ.50 ஆயிரத்தை ஒரு தனியார் நிறுவனம் கட்டி வந்துள்ளது. அந்நிறுவனத்தின் மேலாளர்தான் கைதுச் செய்யப்பட்டுள்ள வினீத்குமார் என போலீஸ் தெரிவித்துள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கிருந்த ஒரு அதிகாரியே ரகசிய தகவல்களை கசிய விட்டுள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "உளவு:போலீஸ் காவலில் உள்துறை அமைச்சக இயக்குநர்"

கருத்துரையிடுக