14 நவ., 2010

பிரார்த்தனைகளுடன் ஹாஜிகள் இன்று மினாவில்

மக்கா,நவ.14:இந்த வருட புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற உலகின் பல பகுதிகளிலிருந்து வருகைத் தந்திருக்கும் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட ஹாஜிகள் இன்று மினாவை நோக்கி பயணத்தை துவக்கினர்.
இன்று (துல்ஹஜ் 8-ஆம் நாள்) மினாவில் தங்கிய பிறகு துல்ஹஜ் 9 ஆம் நாள்(நாளை) அரஃபாவிற்கு செல்வார்கள்.

இந்தியாவிலிருந்து 1,26,000 ஹாஜிகள் புனித கடமையை நிறைவேற்ற மக்கா சென்றுள்ளனர். இதற்கான எல்லா நடவடிக்கைகளும் பூர்த்தியாகிவிட்டன.

மதீனாவிற்கு சென்ற ஹாஜிகளும் வெள்ளிக்கிழமை இரவில் மக்காவிற்கு வருகைத் தந்தனர். மக்கா எல்லையிலிலுள்ள செக்போஸ்டில் நடந்த பரிசோதனையில் ஹஜ்ஜிற்கு செல்ல அனுமதியில்லாதவர்களும், மக்கா இக்காமா(அடையாள அட்டை) இல்லாதவர்களும் பிடிபட்டனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பிரார்த்தனைகளுடன் ஹாஜிகள் இன்று மினாவில்"

கருத்துரையிடுக